1/5/13

20/3/13

மாணவர்கள் 16 பேர் கலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் , இன்று 3வது நாள் ஈரோடை, கருங்கல்பாளையம், பட்டாளிகள் படிப்பகம்




ஈரோடை, கருங்கல்பாளையம், பட்டாளிகள் படிப்பகம்

ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நமது மாணவ மாணவியர் செய்துகொண்டிருக்கிறீர்கள். பொறுமையோடு, பொறுப்புணர்வோடு, அற்புதமாகப் பணியாற்றுகிறீர்கள். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசிவருகிறேன். அழகான தமிழில், அருமையானக் கருத்துக்களை, ஆணித்தரமாக எடுத்து வைக்கும் விதம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, அபாரமான துணிவு – உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துளிர் விடுகிறது மனதில்.

இங்கே தமிழர்கள் என்ற இன உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். சாதாரணத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணும், மலையும், நீரும், கடலும், காடும், காற்றும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், திறமையின்மை முற்றிலும் அகற்றப்பட்டாக வேண்டும். பொதுவாழ்வுக்கு வருவோர் உண்மையும் தூய்மையும் ஒழுக்கமும் உடையோராய் இருக்க வேண்டும்; இல்லையேல் வேரோடு, வேரடி மண்ணோடுக் களையப்பட வேண்டும்.

கல்லூரிகளை, விடுதிகளை மூடிவிடுவதால் புரட்சிகள் அழிந்து விடுவதில்லை.

நமது இனம் விடுதலை அடைந்தாக வேண்டும். இனவிடுதலை என்பது இன்னொருவரிடம் யாசித்துப் பெறுவதல்ல; நாமே எடுத்துக் கொள்வது. புது வாழ்வு என்பது இன்னொருவர் நமக்குப் பிச்சைப் போடுவதல்ல; நாமே அமைத்துக் கொள்வது. வாருங்கள் தோழர்களே, வழி நடத்துங்கள்!


தொடர்புக்கு  - 8760444600,7373651155,9965555694

10/3/13

எங்கள் அப்பா - ஆவணப்படம்

நெஞ்சை உருக்கும் படம் பாருங்கள், பரப்புங்கள்



4/3/13

ஈழத்தோழமை நாள் - கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


ஐக்கிய நாடுகள் அவையில் மனித உரிமைக்குழுக் கூட்டம் ஜெனீவாவில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்தமிழர்களின் விடியலை வலியுறுத்தி, புலம்பெயர் நாடுகளிலுள்ள தழிழர்கள் பல்லாயிரக்கணக்கில் 2013 மார்ச் 4 ஆம் நாள், ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதே நாளில் தாய்த்தமிழகத்திலும் நமது ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக ஈரோட்டில் அனைத்து முற்போக்கு அமைப்புகளும் ஒருங்கிணைந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.








19/2/13

தோழர் மு. மோகன்ராசு நினைவேந்தல் நிகழ்வும், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் தோற்றமும் - பொதுக்கூட்டப் படங்கள்


தோழர் மு. மோகன்ராசு நினைவேந்தல் நிகழ்வும், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் தோற்றமும் - பொதுக்கூட்டம் 17.2.2013 அன்று எழுச்சியுடன் நடந்தது.












தோழர்கள்,தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுமாக சுமார் 1000 முதல் 1500 பேர் வரை கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.

18/2/13

உழைப்பாளிகளின் உரிமைத்தோழன், போராளியிலிருந்து பொதுச்செயலர் வரை நூல் வெளியீட்டு விழா


வெளியீடு - மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை
ஈரோடு.
தொடர்புக்கு - 98429 19097, 73736 51155

16/2/13

தோழர் மோகன்ராசு ஒரு போராளியின் பயணம் ஆவணப்படம் வெளியீடு




நாள் - 17.2.2013 மாலை - 5.00 மணி கருங்கல் பாளையம்,ஈரோடு
அனைவரும் வருக!

மானமும் அறிவும் திரைக்களம்
ஈரோடு.
தொடர்புக்கு - 98429 19097, 7373651155

15/2/13

தோழர் மு. மோகன்ராசு நினைவேந்தல் நிகழ்வும், தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம் தோற்றமும் - பொதுக்கூட்டப் பரப்புரைப் பயணம்

தோழர்கள் பரப்புரை பயணத்தைத் பவானியிலிருந்து துவங்கியபோது



2வது நாள் சத்தியமங்கலத்திருந்து துவங்கியபோது


7/2/13

பயன்மரம் சாய்ந்தது





களச் சாவில் வீழ்ந்திருக்க வேண்டும் நீயோ
கயவர்களால் வீழ்ந்தாயே தோழா ! இந்த
உளக் காயம் என்நெஞ்சை உலுக்கு தேடா
ஓருயிர்க்கும் ஒருதீங்கும் அறியா யேடா
சளைக்காமல் சுழன்றவன் நீ்; தமிழ்மா வீரன்
தமிழ்ப் பகையை வேர்அறுக்க விரைந்த தீரன்
ஒளிக்காமல் யாவையுமே பிறர்க்கே ஈந்த
ஒளிச்சுடர்நீ; விளக்காகப் போய்விட் டாயா?

உதவிஎன யார்வரினும் உதவி செய்வாய்
உள்ளத்தால் எவர்மீதும் அன்பைப் பெய்வாய்
பதவி, பட்டம் என்றே எதையும் நாடாய்
பரப்புரையா, களப்பணியா விழிகள் மூடாய்
விதம்விதமாய் அமைப்புபல இங்கே உண்டு
வேற்றுமைகள் கண்டதில்லை உனது தொண்டு
எதிலேயும் எப்போதும்; முந்திக் கொண்டு
இயங்கிக் கொண்டே இருப்பாய்; இனியார் உண்டு?

ஈரோட்டின் இனமானச் சிங்கம்; கொள்கை
இருப்பினிலே மாசுமரு இல்லாத் தங்கம்
போராட்டம் எதுவரினும் முன்னே நிற்பாய்
புதுமைகளை மாணாக்கன் போலக் கற்பாய்
நீரோட்டம் போல் ஓடி எங்கும் செல்வாய்
நினைத்த செய லில் நினைத்த வாறே வெல்வாய்
யார்போட்ட சதிவலையோ சாய்ந்து விட்டாய்
வேர்காழ்த்த பயன்மரமே! வீழ்ந்து விட்டாய்

வினையாண்மை மிக்கோனே! மோகன் ராசே!
வீதிகளில் மேடைகளில் தொழிலா ளர்தம்
பணி யாண்மைச் செயல்களிலே உனது வாழ்வைப்
பனிபோலக் கரைத்தாயே! உன்னைப் போலே
தனியாண்மை கொண்டதொரு தமிழக் காளை
தனையென்று காண்போமோ? நீ எடுத்த
பணிதன்னை முடித்திடுவோம் ! தமிழ்த்தேசத்தைப்
படைக்கின்ற வரை நாங்கள் ஓய மாட்டோம்!
                              -       பாவலர் தமிழேந்தி