வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் சட்டத்துணைவர்.அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக சட்டத்தைப் பயன்படுத்திச் செயல்பட்டு வரும் ஒரு செயல்வீரர். சாதிய ஒடுக்குமுறையானாலும், மனித உரிமை மீறலானலும், தேசிய இன உரிமை ஒடுக்குமுறையானாலும் அரசாங்கமும், காவல்துறையும் புனையும் பொய்வழக்குகளுக்கு எதிராகக் கீழமை நீதிமன்றங்களில் குறிப்பாக மாவட்ட நீதிமன்றங்களில் முன்நின்று வாதாடி வருபவர்.
தமிழக பழங்குடி மக்கள் சங்கமும், மக்கள் சிவில் உரிமைக் கழகமும் பிற மனித உரிமை அமைப்புக்களும், வீரப்பன் தேடுதல் வேட்டையில், காவல்துறையின் மோதல் கொலைகள், சித்தரவதைகள், வன்கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகள் காரணமாக பாதிக்கப்படோருக்காகத் தொடர்ந்து பல போராட்டங்களையும், இயக்கங்களையும் முன்னெடுத்த போது, முன்னணியில் நின்று தோள்கொடுத்தார்.
அவர் 17.1.2010 அன்று போபாலில் “தேசிய நீதித்துறைக் கழகத்தின்” நிகழ்ச்சி ஒன்றில் ஆற்றிய உரையின் தமிழாக்கத்தை இங்கு தந்துள்ளோம். மனித உரிமைமீறல் வழக்குகளில் மனித உரிமை நீதிமன்றங்களின் செயல்பாடுகள் குறித்த அவருடைய கருத்துக்கள், அனுபவங்கள், ஆலோசனைகள் மிகவும் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டு விவாதிக்கப்படுவது மனித உரிமை ஆர்வலர்களுக்கும் மனித உரிமைகளுக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறோம்.
- மானமும் அறிவும் பயிற்சிப் பாசறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக