30/5/09

முசோலினியின் குளோனிங் - சோனியா


ஒருவருடைய பின்னணி என்ன என்று முழுமையாகத் தெரியாமலேயே ஒருவர்இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் தலைவராக வளையவர முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தி.
சோனியா காந்தியின் இயற்பெயர் என்ன என்பதே தில்லியில் பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜெயலலிதா அவருக்கு எதிராகப் பொரிந்து தள்ளியபோதுதான் பலருக்கும் தெரிந்தது. 1946 டிசம்பர் 9-ம் தேதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோ-பௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பினா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்?
அன்டோனியா மைனோ எனப்படும் சோனியா காந்தியின் தந்தை இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அவரது கருஞ்சட்டைப் படையில் முக்கியத் தளபதியாகவும் இருந்தவர் என்பது நாம் அறியாத ரகசியம். முசோலினியின் பாசிசக் கட்சி இரண்டாம் உலகப் போரில் அழிந்த பிறகு, ஒரு கட்டட ஒப்பந்ததாரராக தன்னை மாற்றிக் கொண்டு தனக்கும் பாசிசக் கட்சிக்கும் இடையில் உறவு இருந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார் அவர் என்பதும் யாரும் கவலைப்படாமல் விட்ட விஷயங்களில் ஒன்று.
1964-ல் கேம்ப்ரிட்ஜ் நகரத்தின் " பெல் கல்வி அறக்கட்டளை' நடத்தி வந்த பள்ளியில் ஆங்கிலம் படிக்க லண்டன் சென்ற அன்டோனியா மைனோ அங்கேயே ஓர் உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலையில் அமர்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜீவ் காந்தியும் நண்பர்களும் அடிக்கடி உணவருந்தச் செல்லும் உணவு விடுதி அது. அங்கேதான் கண்கள் கலந்தன; இருவரும் கருத்தொருமித்தனர்; காதலித்தனர். இதுவும் பலருக்கும் தெரியாத விஷயங்களில் ஒன்று.
அன்டோனியா மைனோவைத் தான் காதலிப்பதைத் தாய் இந்திரா காந்தியிடம் தெரிவித்தபோது, அவர் முதலில் தயங்கினார். இந்தியாவின் முதன்மைக் குடும்ப மருமகளாக ஓர் இத்தாலிப் பெண்ணா? என்கிற தயக்கம் தான் அது. இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியும் நடிகர் அமிதாப் பச்சனின் தாயாருமான தேஜி பச்சன் தான், ராஜீவின் காதலுக்காக இந்திராவிடம் போராடி அனுமதி பெற்றவர்.
அதுமட்டுமல்ல. அன்டோனியா மைனோ சோனியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு வருடம் தேஜி பச்சனுடன் அவரது வீட்டிலேயே தங்கினார். அங்கே, தேஜி பச்சன் அவருக்கு இந்தியப் பழக்கவழக்கங்கள், இந்தி பேச, நம் ஊர் சமையல் என்று எல்லா வகையிலும் பயிற்சி அளித்து நேரு குடும்பத்துக்கு மருமகளாகச் செல்லும் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதற்குப் பிறகுதான், 1968-ல் சோனியா - ராஜீவ் காந்தி திருமணம் நடந்து, அந்தத் தம்பதியர் இந்திரா காந்தி வாழ்ந்து வந்த சப்தர்ஜிங் சாலை வீட்டில் வலதுகால் எடுத்து வைத்து நுழைந்தனர். அரசியல் நாட்டமில்லாத ராஜீவ் காந்தி, தனது தம்பி சஞ்சய் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்ததும், தாய் இந்திராவின் மரணத்துக்குப் பிறகு பிரதமரானதும், 1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு பலியானதும் அனைவரும் அறிந்திருக்கும் விஷயம்.
கணவர் ராஜீவ் காந்தி முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு, 1983-ல் தான் சோனியா காந்தி இந்தியப் பிரஜையானார் என்பதும், இப்போதும் இத்தாலி - இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இரட்டைப் பிரஜையாகவும் தொடர்கிறார் என்பதும் நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரிந்திருக்காது.
சோனியா காந்தியைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத இன்னொரு விஷயம்கூட இருக்கிறது. மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேக்கும் பிறகு இந்தியாவின் பெருவாரியான கிராமங்களுக்கும், இடங்களுக்கும் சென்று இந்தியாவின் மூலை முடுக்குவரை தெரிந்து வைத்திருக்கும் நபர் அநேகமாக சோனியா காந்தியாகத்தான் இருக்கும். மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தியுடன் நிழலாக இவர் சுற்றியது போதாது என்று இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் சுற்றி வருவதும் அதற்குக் காரணம்.
1998-ல் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகக் கூடாது என்று சரத் பவார் மற்றும் சங்மா போர்க்கொடி தூக்கியபோது, கண்கள் சிவக்க உதடு துடிக்கக் கோபமாக சோனியா காந்தி தில்லி அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியேறியதும், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவரைக் கதறி அழுதபடி பின்தொடர்ந்து சமாதானப்படுத்த முற்பட்டதும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.
அதேபோல, 1999-ல் ஜெயலலிதாவின் ஆதரவுடன் அன்றைய வாஜ்பாய் அரசை ஒரு வாக்கில் நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்கடித்து, தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் நாராயணனிடம் பட்டியலுடன் போனதும், தான் அவருக்கு ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை என்று முலாயம்சிங் யாதவ் கூறி சோனியாவின் பிரதமர் கனவைக் குலைத்ததும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.
அன்றும் இன்றும் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றிய விஷயங்களையும் ரகசியமாகப் பாதுகாக்கும் சோனியா காந்தியின் பலம்தான் என்ன? எல்லா விஷயங்களிலும் குறைகளை மட்டுமே சுமக்கும், அன்னிய நாட்டினரான சோனியா காந்தியால் பெருவாரியான இந்தியர்களின் ஆதரவைப் பெற முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சியினரின் ஒட்டுமொத்த ஆதரவையும் அவர் பெற்றிருப்பது எதனால்?
சோனியா காந்தி நினைத்திருந்தால், ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலில் இறங்கி இருக்கலாம். பிரதமராகக்கூட ஆகி இருக்கலாம். காங்கிரஸ் கட்சி பலமிழந்து, பலவீனமான எதிர்கட்சியாக இருந்த நிலையில்தான் அவர் கட்சி உருக்குலைந்து போகாமல் காப்பாற்ற பிரசாரத்துக்கு முன்வந்தார். கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டார்.
எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸýக்குத் துணிந்து தமைமை ஏற்றார் என்பதுதான் அவர் அந்தக் கட்சிக்குச் செய்த மிகப்பெரிய உதவி. 1998-ல் சோனியா காந்தி தலைமை ஏற்றிருக்காவிட்டால், இன்று காங்கிரஸ் என்கிற கட்சியே இருந்திருக்குமா என்பது கேள்விக்குறி!
2004-ல் வலியப் போய் ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், கருணாநிதி, சரத்பவார் என்று நட்பு வலைவீசி ஓர் அணியை உருவாக்கிக் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அரசு அமைய வழிவகுத்த அதே சோனியா காந்தி, 2009-ல் மாநில அளவில் மட்டும் கூட்டணி என்று கூறி, தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறாரே, அது எந்த தைரியத்தில்? மன்மோகன் சிங்கின் ஐந்தாண்டு ஆட்சியின் சாதனையை நம்பியா, இல்லை நேரு குடும்பக் கவர்ச்சி ராகுல் காந்தியின் வளர்ச்சியால் அதிகரித்திருக்கிறது என்று நினைப்பதாலா?
சோனியா ஒரு புதிர் என்பது உண்மை. ஆனால் தவிர்க்க முடியாத புதிர்! மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சிக்கும் இடதுசாரிகள் சோனியாவை விமர்சிப்பதில்லை, கவனித்தீர்களா? அங்கேதான் இருக்கிறது சூட்சுமம்!


நன்றி தினமணி

29/5/09

ஈழ மண்ணில் இந்தியாவின் பொறுக்கித்தனம்

ஆக்கமும் அழிவும் ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றுகிறது என்பதே அறிவியல் அடிப்படை. ஆக்கசக்திக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்துப் பொருள்களையும் அழிவுசக்திக்கு பயன்படுத்தமுடியும் என்பதே மாந்தவெறி அறிவியல் கண்டுபிடிப்பு.

இப்போதைய உச்ச அறிவியல் கண்டுபிடிப்பான செய்மதிகள் (சேட்டிலைட்) அண்டவெளியில் ஏற்படும் மாற்றங்களை உலக உயிர்களுக்கு தெரிவித்து மாந்தகுல வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டி செய்து அனுப்பப்பட்டது. ஆனால் மனித உயிர்களை காசுகளாக மாற்றும் முதலாளிய வெறியர்களின் உல்லாச வாழ்க்கைக்காக உழைக்கும் மக்களின் உயிரசைவுகள் கூட கண்காணிக்கப்பட்டு காட்டிக்கொடுக்கப்படும் அவலநிலை.

இந்நிலை இன்னும் தொடரும்., உலக மக்களுக்கு இனி அந்தரங்கம் என்னு எதுவும் இருக்கமுடியாது. அனைத்தும் வல்லரசியக் கண்களுக்கு முன்னே வெட்ட வெளிச்சமாய் காட்சிப் பொருளாய் மனித இனம் கூனிக்குறுகி அழிந்து போகும்.

இக்காட்சிகள் ஒரு தொடக்கமே


நம் இனத்தை எவ்வளவு துல்லியமாக சிங்கனவனுக்கு காட்டிக்
கொடுத்திருக்கிறது
இந்தக் கொலைவெறி திமுக - காங்கிரசு அரசுகள்

தமிழீழப் பகுதியின் வரைபடமே இல்லாமல் இருந்தபோதே சிங்களவனின் வெறி பல தமிழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அப்பட்டமாக துல்லியமாக காட்டிக் கொடுத்தால் ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துவிடுவான் என்று எண்ணியே இந்த (கூட்டி) காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தது இந்திய பார்ப்பனீய வெறி அரசு.

நமது தலைவரின் ஒவ்வொரு தாக்குதல் திட்டங்களும் நகர்வுகளும் இப்படியே காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று நம்மை ஏன் என்று கேட்க நாதியற்ற இனமாக ஆக்கிவிட்டான்.

ஆனால் இந்திய சிங்கள வெறி அரசுகள் இதற்கான பலனை அனுபவித்தே தீரும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மேலும் காண
http://www.vidivu.lk/tm.asp?fname=20090502_Video

ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தை தலைகுனிய வைக்கும் அவமானத்துக்குரிய வாக்கு – ரைம்ஸ் ஒன் லைன்


போர்க்குற்றங்களுக்குரிய விசாரணைக்கான அழைப்புகளைப் புறக்கணித்து விடுதலைப் புலிகள் மேலான வெற்றிக்காக சிறிலங்காவைப் பாராட்டவைத்த மனித உரிமைகள் மன்றத்தின் வாக்கானது அவமானத்துக்குரியது என பிரித்தானியா ரைம்ஸ் ஒன் லைன் பத்திரிகையின் மைக்கேல் பைனியன் தெரிவித்துள்ளார்.
இதுவானது, எங்கே தமது நடத்தைகளுக்கும் பலத்த விசாரணை வந்துவிடுமோ என்று பயப்படும் உள்நாட்டு கிளர்ச்சிக்காரர்களை முகம்காணும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த வெற்றயென்றும், ஒரு வெற்றியை அடைவதற்கு கிடைக்கக்கூடிய எல்லாவிதமான உபாயங்களையும் பாவிப்பதற்கு முழு ஆதரவையும் கொடுக்கிறது என்றும், மற்றும் சிறிலங்காவின் விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்களுக்குச் செய்யபட்ட பயங்கரமான நம்பிக்கைத் துரோகம் என்றும் மேலும் ரைம்ஸ் இன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் பலத்த போர்க்குற்றங்கள் நடந்திருக்கக்கூடும் என்று கருதி அவற்றை விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 47 அங்கத்துவ நாடுகளில் உள்ள ஐரோப்பிய அங்கத்துவர்கள் ஒரு அவசர கூட்டம் ஒன்றைக் கோரியிருந்தார்கள். ஆனால், இதற்கு பதிலாக மனித உரிமைகள் மன்றமோ சிறிலங்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தை விவாதித்துள்ளார்கள்.
இத்தீர்மானம், மக்கள்மீது நடாத்திய தாக்குதல்களைப் பற்றியோ, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனிதாபிமான அமைப்புகள் 200,000க்கும் மேற்பட்ட மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்குச் செல்ல வேண்டிய அவசர தேவைகளைப் பற்றியோ சிறிதும் குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
முதலாவதாகவும் முக்கியமானதாகவும் வைக்கப்பட்ட ஒரு தேர்வில் ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் தோல்வியடைந்துள்ளது என்றே பல மேற்குலக விமர்சகர்கள் கருதிகிறார்கள். கடினமாக விமர்சிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான ஐ.நா. உரிமைக் குழுவுக்கு பிரதியூடாக 3 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டதே இப்போதுள்ள மனித உரிமைகள் மன்றம் என ரைம்ஸ் செய்தி மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய குழுவானது ஒரு பலம்குன்றிய அமைப்பாகவே பார்க்கப்பட்டது. தமது மனித உரிமைகள் பதிவுகள் தொடர்பாக வெளியுலகத்தின் விசாரணைகளுக்கு ஆர்வப்படாத பெரும்பான்மையான அங்கத்துவரின் வாக்குகளை வைத்தே எப்போதும் அந்தக்குழு முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
புதிய மன்றமானது, ஒரு புதிய நுட்பத்தை கொண்டு வந்தது. அதன்படி சகல 192 அங்கத்துவ நாடுகளினது மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளும் கணிக்கப்படும்.
ஆனால், சிறிலங்கா மீதான வாக்கானது, மனித உரிமைகள் மன்றத்துக்கு எதிரான விமர்சனத்தை மீண்டும் பலப்படுத்தியுள்ளது, என ரைம்ஸ் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

28/5/09

மறப்பேனோ வேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்

2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. “”உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?” அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: “”என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!”

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, “போர் வெற்றி’ தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் “பந்தயக் குதிரைகளாக’ நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது… என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. “”தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா” என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. “”உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: “”என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன”.

தொடர்ந்து நான் கேட்டேன், “”தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?” -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. “”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்”. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், “”நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.” பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.


-அருட்தந்தை ஜெகத் கஸ்பர்