30/6/09

புதுமைப்பித்தன் எனும் படைப்பாளுமையை நினைவு கூர்வோம்


புதுமைப்பித்தன் என அழைக்கப்படும் சொ.விருத்தாசலம் 1906ஆம் ஆண்டு கடலூருக்கு அருகாமையிலுள்ள திருப்பாதிரி புலியூரில் பிறந்தார்.

இது புதுமைப் பித்தனின் நூற்றாண்டு (1909-2009)

இன்று அவரது நினைவு நாள். 1930-களிலேயே படிப்பை முடித்து விட்டு பத்திரிக்கை ஆசிரியராகவும், துணையாசிரியராகவும் பணியாற்றியவர். முழுநேர எழுத்தாளராக தன்னை நிறுவிக் கொண்டவர் புதுமைப் பித்தன் என்கிற விருத்தாச்சலம்.

படைப்பாளிகள் பொதுவாக எதிர்கொள்ளும் விமர்சனக் கணைகள் புதுமைப் பித்தனையும் விட்டு வைக்கவில்லை. என்றாலும், அன்றும் இன்றும் எழுத்தாளர்களாலும் இலக்கிய வாசகர்களாலும் பேசப்படும் கருப்பொருளாக அவர் இருக்கிறார். தொடக்க எழுத்தாளர்களும் வாசகர்களும் முதலில் படித்துவிட வேண்டுமென்று ஆவல் கொள்ளும் படைப்பாளுமையாக தமிழிலக்கிய உலகில் இன்றும் வாழ்கிறார்.
நூற்றாண்டின் அருகாமையில்தான் அவரது பெரும்பாலான எழுத்துப் தொகுதிகள் புதிய பொழிவுடன் வரத்தொடங்கியுள்ளது. புதுமைப் பித்தனின் படைப்புலகம் விரிவான தளங்களையும், பன்முகத்தன்மையும் கொண்டவை. ஆயினும் அவரது படைப்பின் அடிநாதமாக இருப்பது அடித்தட்டு, கீழ் மத்தியத்தர பிரிவு மனிதர்களின் வாழ்க்கை முயற்சிகளும், உளப்பதிவுகளும், சமூகப் பார்வையும் தான்.

தமிழிலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கில், உலகளவிளான சமூக மாற்றங்களும் வாழ்க்கைத் தேற்றங்களுக்கும் ஏற்ப உருவான பல்வேறு இலக்கியப் போக்குகளையும், வடிவங்களையும் புதுமைப் பித்தன் தனது சிறுகதைகளில் கையாண்டுள்ளார். எதார்த்தவாதம், மாயாஎதார்த்தவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம், அமைப்பியல்வாதம், கட்டுடைப்பு முயற்சிகள் என்று பல்வேறு போக்குகள் அழுத்தமாக காலூன்றுவதற்கு முன்னதாகவே அவைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்றவர் புதுமைப் பித்தன். சாப விமோசனம் “கபாடபுரம்” “பிரம்மராட்சஸ்” போன்றவை அவற்றுள் சில. குறிப்பாக பரவலான வாசகத் தளங்களில் விவாதிக்கப்படும் அவரது படைப்புகளில் சிற்பியின் நரகம், கையிற்றரவு, கடவுளும் கந்தசாமி பிள்ளையும், காஞ்சணை, ஒரு நாள் கழிந்தது போன்ற இன்னும் பல சிறுகதைகள் அவரது எழுத்துகள் பன்முகப் படைப்பாற்றலை பறைசாட்டுபவையாகும். இட்லர், ஸ்டாலின் பற்றிய புதுமைப் பித்தனின் மதிப்பீட்டு விமர்சனக் கட்டுரைகளும், அவரது சமூகப் பார்வைக்குச் சான்றாகும்.
மரபுகள் புராணப் புரட்டுகளில் நியாயப்படுத்தப்படும் ஆணாதிக்க கடவுளிய அராஜகத்தை சாப விமோசனத்தில் தோலுரிக்கும் புதுமைப் பித்தன் கடவுளேயானாலும் குற்றம் செய்யும்போது சராசரி மனிதனைக் காட்டிலும் இழிவானவனே என்று இடித்துரைக்கிறார். இது புதுமைப் பித்தனின் கட்டுடைப்பின் ஒரு அடையாளம் மட்டுமல்ல கற்பெனும் மாய வலையில் பெண்மையை உளவியல், வாழ்வியல் ரீதியாக கட்டி வைத்திருக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான சாடல்.

தமிழ் இலக்கியத்தில் பேய்க் கதை மன்னர்கள் வசீகரமாக வளம் வருவதற்கு முன்பே (மேதாவி,பி.டி.சாமி, இன்றைய இந்திரா சவுந்தரராசன் போன்றவர்கள்) மனித மனங்களில் அடியாழத்தில் காலங்காலமாக பதிந்து கிடக்கும் பேய், ஆவி பற்றிய அருவ பயத்தை நுட்பமாக சித்தரித்து காஞசணையை உருவாக்கனார். புதுமைப் பித்தனின் படைப்புத் தளத்தில் பொருந்தாத ஒன்றாக இக்கதை பேசப்பட்டது. புதுமைப் பித்தன் நாவல் எழுதவில்லை அதற்கான காரணம் அறியப்பட வேண்டிய ஒன்று. கடினமானவர் என்று சக எழுத்தாளர்களால் பேசப்பட்ட புதுமைப் பித்தன் கனமான வாழ்வியல் செய்திகளைக் கூட நையாண்டியாகவும், நெகிழ்வாகவும் எழுதும் வல்லமை பெற்றிருந்தார்.
ஒரு படைப்பாளி என்கிற அளவில் தனது எழுத்தாற்றல் மீதும் படைப்பாளுமை மீதம் தன் மீதும் அளவு கடந்த தன்னம்பிக்கையும், கர்வமும் கொண்ட கலைஞனாக புதுமைப் பித்தன் வாழ்ந்திருக்கிறார். அதனால் தானோ பொருளியல் ரீதியாக அவர் எதையும் சம்பாதித்து விடவில்லை. கடைசி வரை எளிமை, பற்றாக்குறை, வறுமையினூடாகவே வாழ்ந்து 1948-ஆம் ஆண்டு சூன் 30 அன்று மறைந்தார்.
புதுமைப் பித்தன் என்கிற ஒரு எழுத்தாளனின் ஆளுமையை நினைவு கூர்வதோடு அவரது படைப்புகளை விரிவாக மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் வழியாக அவரது நூற்றாண்டு நிறைவில் நிறையப் பேசலாம். - கதிரவன்

26/6/09

தமிழீழம் நாம் என்ன செய்ய வேண்டும்? – அழைக்கிறது தமிழர் ஒருங்கிணைப்பு

படத்தைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் படிக்கவும்

17/6/09

ஈழ ஆதரவாளர் விடுதலைக் கோரிக்கை மாநாடு



படத்தைப் பெரிதாக்கிப் படிக்கவும்




15/6/09

தமிழீழத்தின் தன்னாட்சி உரிமை சாகாவரம் பெற்றது! - செல்வவேந்தன்


இலங்கை இந்தியநாட்டின் தென்கீழ்கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடல் கிட்டத்தட்ட இருபது மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு. இலங்கையின் வரலாறு மகாவம்சத்தின்படி கி.மு.6 ஆம் நூற்றாண்டு அளவில் இந்தியாவின் கங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன், தனது ஆட்களுடன் இலங்கையில் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது. எனினும் இதற்கு முன்னரே எல்லாளன் என்ற தமிழ் அரசனது ஆட்சியின் கீழ் இலங்கை இருந்ததை அதே மகாவம்சம் நூல் தெரிவிக்கிறது. பின்னர் இந்தியாவை போலவே ஆங்கிலேயரின் ஆட்சியில் 133 வருடங்கள் கழித்த இலங்கை, 1948 ல் சுதந்திரம் பெற்றது. ஆட்சி அதிகாரம் சிங்களர் கைக்கு மாறியது.
ஆங்கிலேயர் காலத்தில் சுமூகநிலையில் இருந்து வந்த தமிழ் சிங்கள இனங்களுக்கிடையேயான தொடர்புகள், சிறிது சிறிதாக சீர்கெடத் தொடங்கின. இனமுரண்பாடுகளின் வெளிபாடுகள் அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றம் போன்ற பலதரப்பட்ட துறைகளிலும் காணப்பட்டன. தனி சிங்களச்சட்டம்-1956, பௌத்தம் அரசு சமயமாக்கப்படல், இலங்கை குடியுரிமைச் சட்டம் -1948 (இதன் மூலம் இலட்சக்கணக்கான மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது), கல்வி தரப்படுத்துதல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் (தமிழர்களின் மரபு வழித் தாயகப் பகுதிகளில்) போன்ற சட்டத்திட்டங்களை கொண்டுவந்தது இலங்கை அரசு.
அதோடு அரசே திட்டமிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரங்களை ஏற்படுத்தியது. 1958 இல் ஆரம்பித்து தமிழர்களுக்கெதிரான இன கலவரங்கள் அடிக்கடி நிகழத் தொடங்கின. 1958, 1977, 1983 (கறுப்பு ஜூலை), பிந்துனுவேவா படுகொலைகள் போன்றவை திட்டமிட்டு நடத்தப்பட்டன. இவற்றில் இலட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆயிரம் பேர் பலியாகினர். சட்டத்துக்குப் புறம்பாக தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். சிங்களமயமாக்கம் மூலம் இலங்கை தமிழர்கள், பழங்குடிகள், முஸ்லீம்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டனர். உலகமே இந்த படுகொலைகளை கண்டனம் செய்தன.
இந்த தமிழின அழிப்பை எதிர்த்து தமிழ்மக்கள் போராட்டம் நடத்தினர். அதில் முக்கியமாக ஈழத்தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுகட்சி அறவழி போராட்டங்களை மேற்கொண்டது. அவரை தொடர்ந்து அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் அறப்போராட்டங்களை முன்னெடுத்தனர். ஆனால் இலங்கை அரசு மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டது. சிங்கள ராணுவத்தைக் கொண்டு தமிழர்களுக்கெதிரான வன்முறைகளை ஏவிவிட்டது. அதற்கேற்ப சிங்கள ராணுவத்தினரும் தமிழர்களுக்கெதிராக வெறித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
அப்போதுதான் சிங்கள அரசின் வன்முறைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தனர். பல போராளி குழுக்கள் உருவாகின. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான் உறுதியுடன் நின்று, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் கடந்த முப்பது வருடங்களாக தமிழீழ மக்களின் தன்னாட்சிக்காக போராடி வருகின்றது. ஈழத்தமிழர்கள் கேட்கும் தன்னாட்சி அதிகாரம் எந்த அளவுக்கு சரியானது என்பதை புரிந்துகொள்ள தன்னாட்சியை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
தன்னாட்சி உரிமை என்பது "மக்கள் திரள் ஒன்று அதன் அரசு விசுவாசத்தை அல்லது ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் சுதந்திரம்” எனப்படுகிறது. இத்தன்னாட்சியை கோருபவர்கள் முதலில் ஒரு தேசிய இனமாக இருக்க வேண்டும். ஒரு தேசிய இனத்தினால்தான் தன்னாட்சி உரிமைக்காக போராடமுடியும். இதனை வி.இ. லெனின் தனது "தேசிய இனங்களின் பிரச்சினை குறித்து” என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்:
ஒரு மொழி, ஓர் ஆள்புலம், மூலவளம், உளப்பாங்கு, பண்பாடு, திண்மை கொண்டு மலர்ந்த வரலாற்று படைத்த ஒரு சமூகமே ஒரு தேசிய இனம் ஆகும். தன்னாட்சியுடன் வாழும் உரிமை ஒரு தேசிய இனத்துக்கு உண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டாட்சி அடிப்படையில் கூடி வாழும் உரிமையும் அதற்குண்டு. அத்துடன் முற்றிலும் பிரிந்து செல்லும் உரிமையும் அதற்குண்டு. தேசிய இனங்கள் இறைமை படைத்தவை, ஒன்றுக்கொன்று சரிநிகரானவை. தேசிய இனங்களுக்குப் பரந்தஅளவில் தன்னாட்சி அளிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் தலையீடு ஒழிக்கப்பட வேண்டும். ஒரு மொழி கட்டாய ஆட்சி மொழியாக விளங்கக் கூடாது. உள்ளூர் மக்களே தத்தம் சமூக, பொருளாதார நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆள்புல எல்லைகளை வரையறுக்க வேண்டும்’ என்கிறார் வி.இ.லெனின். இந்த கோட்பாடுகளை கொண்டு பார்க்கும்போது தமிழ் இனம் ஒரு தேசிய இனத்திற்கான அனைத்து தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ளது. இதனை உலக அறிஞர்கள் பலரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐ.நா. பொது அவை 1960 ல் "மக்கள் திரள்கள் அனைத்துக்கும் தன்னாட்சி உரிமையுண்டு” என்பதை ஏற்றுக்கொண்டது. அதேபோல உலக மனித உரிமைப் பிரகடனம் 1948 இல் வெளியிடப்பட்டது. அதில் இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் கருத்து மற்றும் பிற கருத்துகள் தாயகம் அல்லது தாய்ச்சமூகம், உடமை, பிறப்பு மற்றும் பிற வேறுபாடுகளின்றி சரிநிகரான உரிமைகளை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு” என பிரகடனப்படுத்தியது.
உலக அளவில் தேசிய இனங்களின் சுய நிர்ணயம் பற்றிய கருத்துகள் மேலோங்கியதனால்தான் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலாந்தும் பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் விடுதலைப் பெற்றன. அதன்பின் யுகோசிலோவியாவுக்குள் ஒடுக்கப்பட்ட குரோசியா, போஸ்னியா கெசகோவினா, மெந்தெனிகிறோ ஆகிய தேசங்கள் தனி நாடுகள் ஆகின. அதேபோல 1971 ல் வங்காள தேசமும், 1993 ல் எரித்திரியாவும், 2002 ல் கிழக்கு தைமூரும், 2008 ல் கொசொவோவும் தனிநாடுகளாக மலர்ந்தன.
ஆக, தமிழ் இனம் ஒரு முழுமையான தேசிய இனம். அதற்கு தன்னாட்சி அதிகாரம் உண்டு என்பதன் அடிப்படையில்தான் 1976 ம் ஆண்டு இலங்கையின் முக்கிய தமிழ்கட்சிகள் உள்ளடக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக் கோட்டையில் மாநாடு ஒன்றை நடத்தியது. அந்த மாநாட்டில் "வட்டுக் கோட்டை தீர்மானம்” என்ற புகழ்பெற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை. 1. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும். 2. அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும். 3. அதற்காக முழு மூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புகளோடு நாம் முன்னெடுக்க வேண்டும் என பிரகடனப்படுத்தியது. இத்தீர்மானம் இலங்கையில் தமிழ் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழநாட்டை அமைக்க வேண்டுமென கோரியது.
1977 பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றி தமிழரின் கனவு சுயநிர்ணய உரிமையே என்பதை பறைசாற்றியது. மக்கள் தீர்ப்பை உள்வாங்காத இலங்கை அரசு தமிழரின் உரிமை போராட்டத்தை நசுக்கியது. இதனை எதிர்த்து தமிழரின் தன்னாட்சி அதிகாரத்திற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை விடுதலைபுலிகள் இயக்கம் நடத்திவருகிறது. இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாகும். ஈழ மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட இந்திய அரசு 1987 க்கு முன்புவரை விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்தது. இந்திராகாந்தி மறைவுக்கு பின்னர் இந்திய இலங்கையின் வெளியுறவு கொள்கையில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டன.
1998 ஆம் ஆண்டில் இந்திய இலங்கை அரசுகளுக்குமிடையே வர்த்தகம் மற்றும் ராணுவ நெருக்கம் உருவானது. 2002 ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைக்கு வந்தது. இந்த பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக ராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் வாஜ்பாய் ரணில் விக்கிரமசிங்கே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்பின் இலங்கையில் ராஜபக்சே கூட்டணி 2005 இல் பதவியேற்றபோது “சிறீலங்காவின் தேசப்பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்று கொண்டிருக்கிறது. சிறீலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்’’ என இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையும், தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதி செய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என கூறிவருகின்றது. இந்த பின்னணியில்தான் நான்காவது ஈழப்போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் பின்னடைவை சந்தித்தனர்.
நடந்து ‘முடிந்த’ இந்த போரில் இலங்கை ராணுவத்தால் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழின மக்கள் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் நடைபிணமாகினர். உயிர்காக்கும் மருந்துகள் கூட தடுத்து நிறுத்தப்பட்டன. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் மற்றும் இரசாயன குண்டுகளை சொந்த நாட்டு மக்கள் மீது ஈவு இரக்கமின்றி வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஐ.நா. சபை உட்பட மேற்கத்திய நாடுகள் போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை கேட்டும் தமிழின மக்கள் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்தது ராஜபக்சே அரசு. வரலாறு கண்டிராத போர் குற்றங்களை செய்துள்ள சிங்கள ராணுவம் தெற்காசிய நாடுகளில் சீனா உட்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ தாக்குதல் தீர்வாகாது என ஒருபுறம் பேசிக்கொண்டே இன்னொரு புறம் ஆயுதங்களை வழங்கிவருகின்றன. எது எவ்வாறாயினும் சர்வதேச தமிழினம் ஏற்றுக் கொண்டுள்ள விடுதலைபுலிகளும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தற்சமயம் பின்னடைவை சந்தித்திருப்பினும், தமிழீழத்தின் தன்னாட்சி கோரும் உரிமை சாகாவரம் பெற்றவை என நிரூபிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
- செல்வவேந்தன் (selvaventhan@gmail.com)
நன்றி கீற்று.

13/6/09

சேகுவேரா - வின் முதுகில் குத்தியதா கியூபா?

சே வின் பிறந்த நாளில் தமிழர்களின் சூளுரை
”உலகமே எதிர்ப்பினும் உரிமையை மீட்போம்”





உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே - சே



அர்ஜென்டினா நாட்டின் மண்ணின் மைந்தனாக பிறந்து சே உலக நாடுகளுன் விடுதலைக்காக தோள் கொடுக்கப் பயணப்பட்ட புரட்சியாளர்.

மெக்சிகோவில் பிடல்காஸ்ட்ரோவை சந்தித்து கியூப நாட்டின் விடுதலைப் போருக்கு தன்னையும் அர்பணித்துக் கொண்டு 1956ல் 81 பேருடன் மெக்சிகோவிலிருந்து கியூபாவுக்கு புறப்பட்டவர் சே.


சே வின் மிகச்சிறந்த கொரில்லா தாக்குதல் திறனே பிடல்காஸ்ட்ரோவுக்கு ஊக்கமளித்து கியூப விடுதலை போரில் பெறும் பங்காற்றியது. 1958 ல் சே தலைமையிலான படைக்குழு சாந்தாகிளாரா நகரை கைப்பற்றி பிடல்காஸ்ட்ரோவுக்கு முதல் வெற்றியை ஈட்டித் தந்தது. 1976 ல் கியூபாவின் அதிபராக பிடல்காஸ்ட்ரோ பொறுப்பேற்க சேயின் கரமே முழு உதவியாற்றியது. அதற்கு பின் கியூப நாட்டின் பல வளர்ச்சிகளுக்கு, உலகின் பல பகுதிகளுக்கு பயணப்பட்டு தொண்டாற்றியவர் சே.

கியூப விடுதலை, முன்னேற்றம் இவைகளோடு நிறைவடையாத சே இன்னும் பல நாடுகளின் அடிமை நிலைக்கு எதிராக களம் காண வேண்டும் என தீர்மானித்து கியூபாவிலிருந்து வெளியேறி பொலிவிய காடுகளில் போராடி மாண்டார்.
.
1976 ல் உலகின் எந்த மூலையில் மனித சமூகத்தின் மீது ஏகாதிபத்தியங்களின் தாக்குதல் நிகழ்கிறதோ அங்கெல்லாம் தன்னாலான எல்லா உதவிகளையும் செய்வோம் என அறிவித்த பிடல்காஸ்ட்ரோவின் கியூபா இன்று ஈழப் பேரழிவிற்கு துணையாக உலக நாடுகள் அவையில் வாக்களித்திருப்பது அதிர்ச்சியளிக்கக்கூடியது.

நமது நோக்குநிலை சற்றேமாறினாலும் கோணப்பரிணாமங்களும் மாற்றமடைகின்றன என்பது சார்பியல் தத்துவம்.


அதுபோலவே

தற்போது கியூப அரசின் நோக்கு நிலையும் மாறியுள்ளதா என்பதே நம்மிடமுள்ள கேள்வி? இந்தியா, பாக்கிஸ்தான், சீனா போன்ற முதலாளித்துவ நாடுகளின் நோக்கங்கள் ஈழத்திற்கு எதிரானது என்பது இயல்பு. ஆனால், உலகின் கம்யூனிச நாடாக நாமெல்லாம் முன்மாதிரியாக சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கியூபா இன்று இப்படி மாறிப்போனதன் காரணமென்ன?.

கியூபாவின் அரசியல் நகர்வுகளை தீர்மானிக்கும் பொறுப்பாளராக பிடல்காஸ்ட்ரோ இல்லாததா?

பிடல்காஸ்ட்ரோவும் அவரது பொலிட் பீரோக்களும் மார்க்சியப் பார்வையை வெறும் கியூப தேசத்துடன் மட்டுமே சுருக்கிக் கொண்டனரா?

சோவியத் நாடுகளிலிருந்த ரசியாவிற்கு அடுத்த சீனாவும் முதலாளிய வர்த்தக சூறாவளிக் காற்றுகளாய் மாறி உலக நாடுகளை நோக்கி சுழன்று அடிப்பதை தனக்குமான முன் மாதிரியாக எடுத்துக்கொள்ள கியூபாவும் முடிவு செய்து விட்டதா?

எப்படி இருப்பினும் சே போன்ற உலக மனித உரிமைப் போராளிகளால் கட்டமைக்கப்பட்ட கியூபா இன்று தடம்மாறிப் போவது வேதனையடையக் கூடிய விடயமே.

அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்கிற வேறும் ஒற்றைக்கண் பார்வையை மட்டுமே வைத்துக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்டமான ஈழ ஆக்கிரமைப்புப் போரை நடத்தி இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்த இனவெறி சிங்கள அரசுக்கு ஆதரவாக இன்று சே இருந்திருந்தால் ஐ.நா.அவையில் கியூபா வாக்களித்திருக்குமா?


சே இன்று உயிருடன் இருந்திருந்தால் தமிழீழ விடுதலைப் போரில் தேசியத் தலைவர் பிரபாகரனுடன் களத்தில் தோளோடு தோளாக நிச்சயம் நின்றிருப்பார். ஆனால் கியூப விடுதலைக்குப் போராடிய அந்த சே எனும் மாபெரும் மனிதனின் முதுகில் குத்துவதைப்போல் தற்பொழுது கியூப அரசு மனிதப் படுகொலைக்கு ஆதரவாக நடந்து கொண்டுள்ளது வெட்கக் கேடானது.

தன் மக்கள், தன்பெண்டு, தன்பிள்ளை, தன்நாடு என்று சுருங்கிப்போன பார்வையின் தன்னல முடிவே கியூபாவின் தமிழீழ நிலைப்பாடு.

தமிழீழத்தில் மொழி, இனம், தேசியம் குறித்த பார்வைகள் கியூபாவின் தற்போதைய அதிபரான இராவுல்காஸ்ட்ரோவிற்கு தெரியாமல் போய்விட்டதா? அப்படி முழுமையாக தெரியாவிட்டால் ஏன் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். அறியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறுவதே மார்க்சியத்திற்கு எதிரானது தானே!

எப்படியோ போகட்டும்!

நாங்கள் மட்டும் தளரப்போவதில்லை.

எவரை எரிப்பினும் ஒருபிடி சாம்பல்!

எத்தனை கொம்பனும் வந்தவழி ஒன்றே!

உரிமையை மீறிய ஒருவளம் இல்லை!

உரிமைக்கு அடிப்படை உயிர்ப் போராட்டம்!
என்பதை நெஞ்சிலேந்தி சேகுவேராவின் இந்த பிறந்த நாளில் சூளுரைக்கிறோம்.

உலகே எதிர்ப்பினும் உரிமை மீட்போம்!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

10/6/09

11.06.2009பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாளில்தமிழர்கள் விடுதலைக்காய் சூளுரைப்போம்!



”கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை, மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை, எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!”

சாதி அழுக்கு, மத அழுக்கு, பொருள் ஆளுமை அழுக்கு, அறிவாளுமை அழுக்கு, வினை ஆளுமை அழுக்கு இப்படிப்பட்ட குமுக அழுக்குகளால் விழைகிற உணர்ச்சிகளுக்கு மாந்தன் ஆட்படாமல் தனிநிலையில் தப்பித்து விட இயலாது.

இப்படிப்பட்ட அழுக்குகளை ஒருவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதிலேயே ஒருவரின் வாழ்க்கை பொருளுடைய தாகின்றது.

அந்தப் பொருளுடைய வாழ்க்கை குமுக உறவுகளோடு உறவு கொண்டு குமுக அழுக்குகளை நெருட்டுகிற சூழலில் பொருளுடைய அவரின் வாழ்க்கை வரலாற்றுக் குரியதாக மாறுகிறது.

அப்படிப்பட்டவர்களே வரலாற்றுக் குரியவர்களாக வரலாற்று மாந்தர்களாக நிற்க இயலும்.

குமுக அழுக்குகளை அக, புற நிலைகளில் நீக்குவதற்கான நிகழ்ச்சிகள் என்பவை ஆழ்ந்த பொருளுடையவை.

அதுவும், இத் தமிழ்ப் பேரினக் குமுகத்தின் மீது படிந்திருக்கிற சொல்லி மாளாதவை.

எவர் எவர்க்கெல்லாம், எவ்வெவற்றுக்கெல்லாம் இத் தமிழகம் அடிமைபட்டுக் கிடக்கின்றதோ அவற்றின் அழுக்குகளெல்லாம் இப் பேரினத்தை முடை நாற்றத்திற் குட்படுத்தி வைத்திருக்கிறது.

சாதிப் புழுக்கள் நெளிந்திடும் சாணித் திரளைகள் நாம் என்றும், இந்து மதம் எனும் இழி மதம் ஒழிக என்று நம் இழிநிலைகளைச் சாடியதோடு ஆரியத்திற்குப் பாய் விரித்ததை எதிர்த்தும் ஆங்கிலத்திற்கு கற்பிழந்ததைக் கண்டித்தும் இம் மண்ணின் இழி அழுக்குகளைத் தம் தீ எழுத்துக்களாலும் செயலாலும் பொசுக்க எழுந்த வரலாறே பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அவர்களின் வரலாறு.

பாவலரேறு அவர்களின் வரலாறு எழுத்தின் வரலாறாக மட்டுமன்று. செயலின் வரலாறாகவும் இருந்தது.
அவரின் எழுத்தும் செயலும் மாறுபாடுடையதன்று

தூய தமிழ் முயற்சிகள் எழுத்தளவிலும், மொழி அளவிலோடும் நின்றிருந்ததை, செயலியக்கம் வழியும், மொழி நிலை தாண்டி இன நாட்டு நலம் நோக்கியும் செயற்படுத்தியது தென்மொழியே.

தென்மொழியின் பணி இதழ்ப் பணியாக மட்டும் நில்லாமல் இயக்கப் பணியாகவும் விரிந்திருந்தது.

தூய தமிழியக்கத்திற்குத் தென்மொழியின் பணியே பேரியக்கமாய், பெரு மக்களிக்கயமாய் நடந்தது.

தென்மொழியின் ஆசிரியராகவும், தூய தமிழியக்கத்தின் முதற் படைஞராகவும் நின்று போரிட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களே.

பாவலரேறு ஐயா அவர்களின் வாழ்க்கை, தமிழ்த்தேச எழுச்சியின் வாழ்க்கை.
அவரின் வரலாறு தமிழ்நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு.

”எப்படியேனும் இத் தமிழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும்- என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்!”
- பாவலரேறு.

10.03.1933
சேலத்தில் இரா. துரைசாமி ஐயா – குஞ்சம்மாள் அம்மையார் அவர்களின் முதல் மகனாகப் பிறந்தார்.
9ஆம் அகவை (வயது) யில்
”குழந்தை” எனும் கையெழுத்து இதழை தாமே இதழ் ஆசிரியராக இருந்து நடத்தினார். அதனால் பள்ளிக்கூடங்களில் ”குழந்தை ஆசிரியர்” என்றே அழைக்கப்பெற்றார்
13ஆம் அகவையில்
8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ”தூவல் (பேனா) வன்மையா? நா வன்மையா?” என்று திருச்சி வானொலி நடத்திய பட்டிமன்றத்தில் ”தூவலே வன்மையானது” என்று பேசி பரிசு பெற்றார்.
”மல்லிகை” எனும் தனது முதல் பாவியத்தை எழுதினார். தொடர்ந்து பூக்காரி எனும் பாவியம் எழுதி பின்னாளில் ”கொய்யாக்கனி” எனும் பெயரில் வெளியிட்டார்.
25.04.1951 ஆம் ஆண்டு
தாமரை அம்மையாரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்.
01.08.1959 ஆம் ஆண்டு
”தென்மொழி” இதழைத் தொடங்கினார். இதழின் பெயர் மொழி ஞாயிறு பாவாணர் அவர்களால் சுட்டப்பெற்றது.

26.01.1965 ஆம் ஆண்டு
இந்தி வல்லாண்மையை எதிர்த்து கடுமையான துண்டறிக்கை தென்மொழி சார்பில் இலக்கக் (இலட்சம்) கணக்கில் அச்சிட்டு பரப்பப்பெற்றது.
17.11.1965 ஆம் ஆண்டுஇந்தி எதிர்ப்புப் போரில் அன்றைய முதல்அமைச்சர் பக்தவச்சலத்தை கடுமையாகக் கண்டித்து ஆசிரியவுரை எழுதினார். இதற்காக அரசு வழக்குப் பதிவு செய்து இவருக்கு 200 உருபாய் தண்டம் அல்லது நான்கு மாதம் கடுங்காவல் சிறைத்தண்டனை என தீர்ப்பளித்தது. ஐயா தொகை கட்ட மறுத்ததால் வேலூர் நடுவன் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஐயாவின் அஞ்சல் துறைப்பணி பறிக்கப்பட்டது.
1966 ஆம் ஆண்டு
தென்மொழியில் ”தமிழக விடுதலை இயக்கம்” விரைவில் தொடங்கப்பெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

1967 ஆம் ஆண்டு
”தமிழக விடுதலைப் படை” விரைவில் அமைக்கப் பெற இருப்பதாகவும் அதில் உடனே உறுப்பனர் ஆகிக் கொள்ளுங்கள் எனும் அழைப்பை தென்மொழியில் விடுத்தார்.
07.11.1969 ஆம் ஆண்டு
தமிழக விடுதலைப் படைக்கான அமைப்புக் கூட்டம் திருக்கோயிலூரில் நடத்தப்பெற்றது. 96 பேருக்கு அழைப்பு விடுக்கப்பெற்று அதில் 34 பேர் வந்திருந்தனர். வந்தவர்கள் குருதிக் கையொப்பமிட்டு தமிழக விடுதலைக்கென முன்னின்று செயல்படுவோம் என உறுதியுற்றனர்.
10,11.06.1972 ஆம் ஆண்டு
தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழக விடுதலை மாநாடு திருச்சி – தேவர் மன்றத்தில் ஐயா அவர்கள் அமைப்பாளராக இருந்து நடத்தினார். மாநாட்டினையொட்டி மாபெரும் பேரணி தமிழக விடுதலைக்கான முழக்கங்களுடன் நடத்தப்பெற்றது.

09.06.1973ஆம் ஆண்டு
தமிழக விடுதலை இரண்டாம் மாநாடு மதுரை இரீகல் திரையரங்கில் ஐயா தலைமையில் ஏற்பாடு செய்யாப்பட்டது. முன்னதாக கட்டமொம்மன் சிலையிருந்து பேரணி புறப்பட்டபோது காவல் துறையால் தளைப்படுத்தப் பட்டனர்.
13.07.1975 ஆண்டு
தமிழக விடுதலை மூன்றாம் மாநாடு சென்னை கடற்கரையில் ஐயா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் முந்தைய நாளே ஐயா உள்ளிட்ட 22 பேர் சிறைப் படுத்தப்பட்டனர். 56 நாட்கள் கழித்து பிணையலில் விடுதலை செய்யப்பட்டனர்.
05.02.1976 ஆம் ஆண்டு
இந்திராகாந்தியின் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கை (மிசா) கொடுஞ் சட்டத்தின் கீழ் ஐயா சிறைபடுத்தப்பட்டார்.

19.05.1978 ஆம் ஆண்டு
இலங்கைக்குச் சென்று இன விடுதலை குறித்து சொற்பொழிவு ஆற்றினார்.

27.08.1978ஆம் ஆண்டு
தமிழீழ விடுதலைப் போராளிகள் தமிழகத்திற்கு முதன்முதலில் வந்த பொழுதிலிருந்து அவர்களுக்கு ஐயா மிகு துணையாக இருந்து வெளிப்படையாக ஆதரவு தந்தார்.

18.04.1981ஆம் ஆண்டு
அந்தமான் தீவுக்கு முதன்முறையாக கப்பலில் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
12.05.1981ஆம் ஆண்டு
”மனுநூல் எரிப்புப் போராட்டத்தில்” கலந்து கொண்டு தளைப்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

7,8.11.1981ஆம் ஆண்டு
”உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்” தொடக்க மாநாடு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. மாநாட்டில் தமிழீழப் போராளிகளும், ஐயா அமிர்தலிங்கமும் கலந்து கொண்டனர்.
06.08.1982ஆம் ஆண்டு
விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன், திரு. உமா மகேசுவரன் உள்ளிட்ட ஐவர் தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டு பிணையலில் வெளிவந்தபோது பாவலரேறு தனது குடும்பத்திருடன் நேரில் சென்று வரவேற்றார்.
04.08.1983ஆம் ஆண்டு
தென்மொழி அலுவலகத்திற்குள் புலனாய்வுக் காவல் துறையினர் புகுந்து தமிழீழம் தொடர்பாக வெளியாகவிருந்த தமிழ்நிலம் இதழ்களையும் அச்சு எழுத்துக்களையும் பறிமுதல் செய்ததோடு ஐயா மீதும் பொழிலன் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

10.09.1983ஆம் ஆண்டு
ஐரோப்பிய கண்டத்திலுள்ள இலண்டன், பிரான்சு, சுவிட்சர்லாந்து,செருமணி ஆகிய நாடுகளுக்குப் பயணித்துப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

21.10.1984ஆம் ஆண்டு
மீன்சுருட்டியில் சாதி ஒழிப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் ”சாதித் தீமைகளும் அதை ஒழிக்கும் திட்டமும்” எனும் தலைப்பில் ஐயா எழுதிய நூல் வெளியிடப் பெற்றது. அதே நிகழ்ச்சியில் தோழர் தமிழரசன் அவர்கள் எழுதிய ”சாதி ஒழிப்பும், தேசிய இன விடுதலையும்” எனும் நூலும் முன்வைக்கப் பெற்றது.
11.11.1984ஆம் ஆண்டு
”ஒடுக்கப்படுவோர் உரிமை மீட்பு கூட்டமைப்பு” பாவலரேறு ஐயா அவர்களின் தலைமையில் தொடங்கப்பெற்றது.
09.12.1984ஆம் ஆண்டு
உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், பெரியார் சம உரிமைக் கழகம், அறிவியக்கப்பேரவை, தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா.லெ.), நடுவண் சீரமைப்புக் குழு – ஆகிய இயக்கங்கள் இணைந்து ”தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி” எனும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் அமைப்புக் குழு பொறுபபாளராக ஐயா அவர்கள் செயல்பட்டார்கள்.
27,28.12.1986ஆம் ஆண்டு
தமிழின எதிர்காலத் தீர்மான மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தினார்.

27.11.1990ஆம் ஆண்டு
மாவீரர் நாளுக்கென சிறப்பு நிகழ்ச்சிக்கு பாவலரேறு ஐயா ”மாவீரர் நாளிலே மலர்க தமிழீழமே!” எனும் பாடலை தென்மொழியில் எழுதினார்.
02.12.1990ஆம் ஆண்டு
ஐயா அவர்கள் தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களில் எழுதிய ”தமிழீழம்” எனும் தொகுப்பு நூல் வெளியிடப்பெற்றது.

20.04.1991ஆம் ஆண்டு
தமிழ்த்தேச தன்னுரிமை மாநாட்டை பழ.நெடுமாறன் ஒருங்கிணைக்கையில் மாநாடு தடை செய்யப்பட்டு பாவலரேறு உள்ளிட்ட 90 பேர் 7 நாள் சிறை வைக்கப்பட்டனர்.

01.09.1991ஆம் ஆண்டு
”தமிழீழ விடுதலை ஏற்பிசைவு (அங்கீகரிப்பு) மாநாடு” வேலூரில் தமிழ்நாடு இளைஞர் பேரவை நடத்தியது. இதனால் பொழிலன், தமிழ்முகிலன், பவணந்தி உள்ளிட்ட 73 பேர்கள் ஐயா உடன் தளைப்படுத்தப் பட்டனர்.
இட்ட சாவம் முட்டியது - பாவலரேறு
...”இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக்
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக்
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக!
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும்
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!...முட்டுக நின்னுயிர்!”

08.09.1991ஆம் ஆண்டு
தமிழர் பாதுகாப்பு மாநாடு எனும் தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் தமிழீழத்திற்கு ஆதரவாகவும் கொடியவன் இராசீவைக் கொன்ற ஈழ மரத்தி தனுவை பாராட்டி பேசியதன் காரணமாக 24.09.91ல் தளை செய்யப்பெற்று 15 நாள் கழித்து பிணையலில் விடுதலையானர்.

”அதோ என் தமிழரை சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை நரம்பு எல்லாம்!
அடடா! உலகம் கேட்டிடும் பார்த்திடும்!
ஆயினும் அதன்மனம் கல்லாம்!
இதோ, நான் ஒருவன் இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறைசெய்யினும் செய்க!
ஈழத் தமிழரை ஆதரிக் கின்றேன்!
என்தலை! கொய்யினும் கொய்க!”
27.01.1993ஆம் ஆண்டு
தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கைக்காக தொடர்ந்து செயல்பட்டதால் ”தடா” சட்டத்தின் மூலம் பாவலரேறு, பழ.நெடுமாறன், பொழிலன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் 7 மாதம் கழித்து ஐயா விடுதலை செய்யப்பட்டார்.

22.04.1995ஆம் ஆண்டு
அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு மார்க்சிய லெனினிய கட்சியின் பொதுச்செயலாளர் கார்முகிலின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

24.04.1995ஆம் ஆண்டு
தமிழே பயிற்று மொழி, ஆட்சிமொழி என வலியுறுத்தி தலைநகர் தமிழ்க் கழகம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு சிறைபடுத்தப் பட்டார். இதுவே ஐயா அவர்கள் ஈடுபட்ட இறுதிப் போராட்டம்.
”எதுவரை எம்மூச்சு இயங்கு கின்றதோ-
எதுவரை எம்உடல் இம்மண் தோயுமோ-
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ
அதுவரை மொழிஇன ஆர்ப்படங்காது!”

11.06.1995ஆம் ஆண்டு
ஐயா அவர்களுக்கு குருதி அழுத்தம் குறைவுற்றது, சிறுநீரகம் செயலிழந்தது. 11ஆம் நாளன்று ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் இத் தமிழ் பேருலகத்தை விட்டு மறைவுற்றார்.


”வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்!
வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ்மேல்தான் வீழ்வேன்!
தனியேனாய் நின்றாலும் என் கொள்கை மாறேன்”
- பாவலரேறு.




”ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தா யிங்காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் – மண்டியிட்டால்
பெற்றவன்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றே தயக்கமின்றிச் சாற்று!”



அன்பார்ந்த தமிழர்களே!
தமிழகமும் தமிழீழமும் முற்றுமாய் விடுதலை அடைய வேண்டுமெனில் நாம் இனியும் சொரணையற்ற மக்களாய் வெறும் சோற்றுப் பிண்டங்களாய் வாழக்கூடாது. ”உரிமையை மீறிய ஒரு வளம் இல்லை” எனும் ஐயா பாவலரேறுவின் அறைகூவலை அவரது நினைவு நாளான இன்று நெஞ்சிலேந்தி சூளுரைப்போம்!
இந்தியாவிலிருந்து தமிழகத்தையும்
இலங்கையிலிருந்து தமிழீத்தையும் விடுவிப்போம்!


”வாட்டுகின்ற வறுமைக்கும் எந்தமிழர் அடிமையாய்
வாடுதற்கும், நீட்டுகின்ற வெடிகுழல்தான் - தமிழகத்தில்
நிகழ்த்தும் என்றால் காட்டுங்கள் தமிழ்மறத்தை!”
















7/6/09

முகாம்களிலுள்ள சிறுவர்கள் சிங்களப் பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்

வவுனியா முகாம்களிலுள்ள சிறுவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.

வவுனியா முகாமில் திட்டமிட்ட அடிப்படையில் பெற்றோரையும், பிள்ளைகளையும் தனித்தனியாகத் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா படையினர், தமிழ் சிறுவர்களை புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லுகின்றனர்.

18 அகவைக்கு உட்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தும் படையினர், அவர்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஒப்புக்கொள்ள வேண்டும் என பணித்துவிட்டு, படையில் இணைக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே பல சிறுவர்கள் இவ்வாறு சிங்களப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 சிறுவர்கள் இவ்வாறு கொண்டு செல்லப்பட இருப்பதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜகத் வெள்ளவத்த உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழினத்தின் எதிர்காலத்தை திட்டமிட்டு அழிக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பன்னாட்டு மனிதநேய அமைப்புக்களும், மனித உரிமை நிறுவனங்களும் விரைந்து குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

6/6/09

சமஷ்டி ஆட்சி-வரலாறு

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்ச்சியைக் கொண்ட நாடக சுவிசர்லாந்து(Switzerland) விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜெர்மன்,பிரஞ்ச்,இத்தாலி,ரூமேனிய மொழிகள் நடைமுறையில் உள்ளது. உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிசர்லாந்தும் ஒன்றாகும். பேஃர்ண்( Berne ) ஐ தலை நகராக கொண்ட சுவிசர்லாந்து மிகப்பெரிய நகராக சூரிஸ்(Zürich ) இனை கொண்டுள்ளது. பேஃர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் ஜெர்னிவா(Geneva ) உடன் குறிப்பாக சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன.

சர்வதேச தொண்டு நிறுவனமான செஞ்சிலுவை சங்கம்(Red Cross), உலக வர்த்தக அமைப்பு(WTO), ஐக்கியநாட்டுகள் சபை(UN) இன் காரியலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐ.நா(UN) காரியாலயம் அந்நாட்டில் இருந்தபோதிலும் 2002ம் ஆண்டுவரை இதில் இணைந்திராத போதிலும் League of Nations (தேசிய நல்லிணக்கசபை) உறுப்பு நாடக ஆரம்பத்திலிருந்தும் வந்துள்ளது, ஐரோப்பிய ஒன்றியம்(EU)இல் இணைவதற்காக 1990இல் சுவிசர்லாந்தில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியுற்றதால் இணையும்அந்தஸ்து இல்லாத நாடகவும் உள்ளது (ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்திய ஒரேஒரு நாடு சுவிசர்லாந்து மட்டுமே.).

இந் நாடு 1291ம் ஆண்டு ஆகஸ்ட்டு 1ம் திகதி சுதந்திரம் அடைந்த செய்தி வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.இன்று வரை சுவிசர்லாந்து ஆகஸ்டு 1ம் திகதியை தேசிய விடுமுறையாக கொண்டடுவதும் குரிப்பிடத்தக்க விடையமாகும். சுவிசர்லாந்து1848ம் ஆண்டு செப்ரம்பர் 12ம் நாளில் இருந்து இன்றய காலம் வரையுள்ள நடைமுறைக்கு வந்த சமஷ்டி கட்டமைப்பின் இடையில் நீண்ட வரலாறு கொண்டுள்ளது.1291இல் சுதந்திரமடைந்த போதிலும் இன்றய மத்திய சுவிசர்லாந்து நிலப்பகுதியை மட்டுமே நிலப்பரப்பாக கொண்டிருந்தது. பின்பு நாளடைவில் நில அபகரிப்பு கலம்காலமாக நடாத்தப்பட்டு 1848இல் எல்லைகள் வரையப்பட்ட பரந்த நவீன சுவிசர்லாந்து தோன்றிய தாயிற்ரு. சுவிசர்லாந்தின் மொத்த நிலப்பரப்பு 41,285 சதுர கிலோமீற்றர் (15,940 சதுர மைல்கள்) களாகும்.

இது மற்றய நாடுகளுடன் ஒப்பிடும் போது 136ம் இடத்தில் பரப்பளவில் உள்ளதுடன் அந்நாட்டின் நீர் பரப்பு நிலப்பரப்பிடன் ஒப்பிடும் பொழுது 4.2% மாகவும் உள்ளது. சுவிஸ் நாடானது எல்லைகளாக பிரான்ஸ், ஜேர்மனி, இத்தலி, ஆஸ்த்திரீயா, இலித்துவேனியா வையும் கொண்டுள்ளது. நீண்ட காலமாக நடுநிலையை கடைப்பிடித்து வரும் சுவிஸ்(சுவிசர்லாந்து) 1815ல் இருந்து எந்த போர்(யுத்தம்) ஒன்றையும் சந்திக்கவும் இல்லை என்பது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.1291ல் சுதந்திரமடைந்த சுவிஸ் 1499ம் ஆண்டு 22செப்ரம்பரில் அங்கீகாரமற்ர கட்டமைப்புடன் ஆட்சி செய்த போதிலும் 1648ம் வருடம் ஒக்டோபர்24ல் அங்கீகரிக்கப்பட்டது.

பின்பு1798ல் பிரஞ்சு நாட்டின் படைஎடுப்பினால் சிறிது காலம் ஆட்ச்சி மாறலாகி நெஃப்பொலியன்(Napoleon) வீட்சிவரை(1813வரை) நீடித்ததாயிற்று. பிரஞ்சு நாட்டின் விடுவிப்பின் பின்பு 1813ல் இருந்து 1815 வரை பலரது ஆலோசனைகளையும் உள்ளடக்கியதான இன்றய ஸ்விட்சலாந்து கட்டமைப்பு நடைமுறைக்குவந்து.1815ம் வருடம் ஆகஸ்டு7ம் நாள் நடைமுறைக்கு வந்த அமைப்பு முன்பில் இருந்த "கன்டொன்" (canton-இலத்தின் மொழியில் உப நில பிரிவுகளை குறிப்பதாகும்.) அமைப்பை அடிப்படையாக கொண்டிருந்ததாகும். 1884ல் உதயமான சமஷ்டி ஆட்சிமூலமாக 26 கன்டொன்கள் அமைக்கப் பட்டதுடன் இரு நாடளுமன்ற அமைப்பு களையும் உள்ளடக்கியதாக உள்ளது. இரண்டு பாரளுமன்றங்களில் ஒன்று கன்டொன் உறுப்பினர்களை பிரதிநிதிப்படுத்து வதாயும் (46உறுப்பினர்கள்) மற்றயது தேசிய அளவில் (200உறுப்பினர்கள்) மக்கள் தெரிவின் மூலமாக நியமிக்கப்படுவர். இந்த கன்டொன் அமைப்பானது சமஷ்டித்திட்டத்தில் 1848இல் சேர்க்கப்படு முன்பாகவே முன்னய ஆட்சிகளில் இதை ஒத்த அமைப்பு 700 வருடங்களாக இருந்தமை குறிப்பிடதக்க வரலாறு. கன்டொன்கள் ஒவ்வொன்றும் சுயமாக ஆட்சிசெய்யும் அமைப்பு சமஷ்டி திட்டத்தில் உள்ளபோதிலும் இவைகள் மத்திய நாடாளு மன்றத்தில் அவ்வப்போது கூடுகிறன.

இந் நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டம், ஒழுங்கு (பாதுகாப்பு), வெளிவிவகாரம், பொருளாதாரம், நாணயம், இவ்விடயங்களில் சுயநிர்ணயம் கொண்டபோதிலும் பொது நானயத்தை1850இல் இருந்து சுவிசர்லாந்து கடைப்பிடிக்கின்றது. 2005இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுவிசர்லாந்தின் மொத்த தேசியவருமானம் $264.1 பில்லியங்கலாகவும் (இது உலகின் 39ம் இடம்) சனத்தொகை 7,2888,010 ஆக(அண்ணளவாக7.3 மில்லியன்கள்) இருந்தது. 2006ல் கணக்கெடுப்பில் சனத்தொகை 7.5 மில்லியன்களாகவும் தனிமனித வருமானம் $32,300 ஆகவும் இது உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது 10ம் இடத்திலும் உள்ளதானது சுவிசர்லாந்து(Swiss)இன் சிறப்புக்கு சான்றுகளாகும்.

3/6/09

பேசாமல் பேச வைப்பார் பிரபாகரன்

எங்கள் தேசியத்தலைவர் கொல்லப்பட்டார் என்று கொண்டாடிக் கொண்டிருக்கும் ஒட்டுக் குழுக்களுக்கு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் அவர்களுடையதும் உங்களதும் செயற்பாடுகளை அன்றிலிருந்து இன்று வரை பார்த்துக் கொண்டிருக்கும் சாதாரண பொதுமகனின் வேதனை மிகுந்த வணக்கம்.தமிழ் ஈழ தேசியத்தலைவர் கொல்லப் பட்டார் என்பதை நாங்கள் நம்பவில்லை என்ற உண்மையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் கூற்றுப் படியும் உங்கள் எஜமானர்களான சிங்கள ராணுவத்தின் கூற்றுப் படியும் அவர் இல்லை என்கிற சூழலிலேயே உங்களுடன் பேச விரும்புகிறேன்.

சரணடைய முன்வந்த புலிகளின் தலைமை நயவஞ்சகமாக கொல்லப் பட்டது என்று மகிழ்ந்து புலிகள் உங்களுக்கு துரோகம் செய்தார்கள் என்ற உங்களது 27 வருட பாட்டைப் பாடி அதனை இதற்கு ஒப்பிடுகிறீர்களே, உண்மையில் உங்கள் மனதில் என்ன நினைத்து இருக்கிறீர்கள் ?புரியவில்லை. உங்கள் பிரச்சனைகள் எல்லாம் பொதுமக்கள் எவரும் இல்லாத இடத்தில் புலிகளும் நீங்களும் மட்டும் இருந்த தீவில் நிகழ்ந்ததா? நாங்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தோம். நடந்தது எல்லாம் என்ன? நடந்து கொண்டிருப்பது என்ன என்று.

ஒரே இலக்குடன் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் நீங்கள் எதற்கு வெவ்வேறு இயக்கங்களை ஆரம்பித்தீர்கள் என்பதே புரியவில்லை எங்களுக்கு. சிவகுமாரன் தொடக்கி வைத்தான். டெலோ அமைப்பின் குட்டிமணி ஜெகன் தங்கத்துரை ஆகியோர் கைது செய்யப்பட, பிரபாகரன் என்னும் துடிப்பும் வீரமும் நிறைந்த இளைஞன் வழி தொடர்ந்தான். சரி, சொந்தப் பிரச்சனையால் உமா மகேஸ்வரன் பிரிந்து போனான். புளொட் அமைப்பை உருவாக்கினான். எல்லாம் சரி. அதன் பிறகு சேர்ந்த இளைஞர்கள் ஒன்று பிரபாகரனுடன் அல்லது உமா மகேஸ்வரனுடன் அல்லது டெலோவில் சேர வேண்டியது தானே? எதற்கு மழைக்கு முழைத்த காளான்கள் மாதிரி புது புது இயக்கங்களை உருவாக்கினீர்கள்? தமிழ் ஈழம் என்ற ஒரே கொள்கை தானே உங்களிடம் அன்று இருந்தது? கண்ணீர்த்துளி போல இருக்கும் இலங்கையிலிருந்து பிரியப் போகும் தமிழ் ஈழத்தை ஆளுக்கொரு குறிசசியாகப் பிரித்து ஆட்சி செய்யவா? 8 மாவட்டங்களைக் கொண்ட தமிழ் ஈழத்தை வென்றெடுக்க அமைக்கப் பட்ட இயக்கங்களின் எண்ணிக்கை தெரியுமா? 8 அல்லது அதற்கும் மேல்.டெலோ., L.T.T.E, ஈரோஸ்,புளொட், E.P.R.L.F., E.N.D.L.F., TELF, EPDP, . இவை என் ஞாபகத்தில் இருப்பவை. இதைவிட இன்னும் இருந்ததோ எனக்குத் தெரியாது.

கிட்டு, எங்கள் பிரச்னையை பேசித் தீர்ப்போம் என்று கோண்டாவிலில் வைத்து டெலோ தலைவர் உயிர்ப் பிச்சை கேட்டும் சுட்டுக் கொல்லப் பட்டர் என்பதை நினைவு கூருகிறீர்களே,உங்கள் பிரச்சனை என்ன என்று எங்களுக்குத் தெரியாது என்று நினைத்தீர்களா? திம்பு பேச்சுவார்த்தைக்குப் போகும் வரையிலும் ஒற்றுமையாய் இராணுவத்தைத் தாக்கிய நீங்கள் அதன் பிறகு உங்களுக்குள் மோதிக் கொண்டீர்கள்.கிடைப்பது எதுவானாலும் அதைப் பெற்றுக் கொள்வோம் என்ற சந்தர்ப்பவாதிகளுக்கும் தமிழ் ஈழம் என்ற நினைத்த குறிக்கோள் வேண்டும் என்ற லட்சிய வாதிக்கும் இடையில் சிக்கி திம்பு பேச்சுவார்த்தை சீரழிந்தது எமக்கும் தெரியும் “தோழர்களே.”

உங்களதும் புலிகளும் போராட்டங்கள் என் வயதுடன் வளர்ந்தவை. நித்தம் நித்தம் அவதானித்ததையும் அனுபவித்ததையும் மட்டுமே இங்கு சொல்கிறேன்.ஆனாலும் இந்தக் கொலைகள் விடயத்தில் புலிகளை அப்போது நாங்கள் ஆதரிக்கவில்லை.உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டபோது நீங்கள் இப்போது நினைவு கூரும் வாசுதேவாவை,பாரூக்கை தெருவில் சுடப்பட்டுக் கிடந்த ஸ்ரீ சபாரத்தினத்தை நினைத்து வேதனைப் பட்டிருக்கிறேன், எதற்கு இவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று ஆத்திரப் பட்டிருக்கிறேன். எங்களைப் புலிகள் இப்படி அழித்திருக்கா விட்டால் நாங்களும் எங்கள் மக்களுக்காகப் போராடியிருப்போம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டு உண்மையாக இருக்குமோ என்று நினைத்திருக்கிறேன்.எல்லாம் 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளுக்கும் இந்திய அமைதிப் படைக்கும் யுத்தம் ஆரம்பிக்கும் வரைக்கும் தான். புலிகள் காட்டுக்குப் போனதும் இந்திய ராணுவத்தின் ஆளுகைக்குள் நீங்கள் எங்களை நோக்கி வந்தீர்கள். நீங்கள் கூறியபடி சந்தர்ப்பம் உங்களுக்குத் தரப்பட்டது.என்ன செய்தீர்கள் “தோழர்களே?” எங்களுக்காகப் போராட வேண்டாம், நாங்கள் அழிவதை, எங்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப் படுவதைத் தடுத்து நிறுத்தினீர்களா? இவற்றையெல்லாம் நீங்களே செய்தீர்களே?புலிகளை மட்டுமா நாங்கள் வளர்த்தோம்?உங்களையும் நாங்கள் தானே வளர்த்தோம்? உங்களுக்குள் நீங்கள் மோதிக் கொண்டதற்கு நாங்கள் என்ன செய்வோம்? எங்களைப் பழி தீர்த்துக் கொண்டீர்களே?

84,85 களில் எங்கள் வீட்டில் இருந்தே தினமும் 5 பேருக்கு சாப்பாடு பார்சல் போகும். ஒரு நாளைக்கு ஒரு இயக்கம் என்ற முறையில். ஆனால் புலிகளுக்கு உணவு கொடுத்ததாகச் சொல்லி எங்கள் வீட்டு வாசலில் துப்பாக்கியோடு நின்றீர்கள்.உங்களுக்கும் தானே தந்தோம் என்பதை மறந்து என் சகோதரனை மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே?1988 இல செயின்ட். ஜோன்ஸ் கல்லூரி உயர்தர மாணவன் தேவகுமாரனை இந்திய ராணுவத்துடன் சேர்ந்து கைது செய்து முகமே அடையாளம் தெரியாதவாறு மூர்க்கத்தனமாகத் தாக்கிநீர்களே? அவன் செய்த தேசத் துரோகம் இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைப் பற்றிய துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கிடையில் விநியோகித்தது தான்.உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியானபோது நீங்கள் பிணமாகத் தெருவில் போட்ட தேவகுமாரன் உயிரியல் பாடத்தில் 4 பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறியிருந்தான்.

சொல்லுங்கள் “தோழர்களே” இவர்கள் பெயராவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உங்களால் சுட்டுக் கொல்லப்பட்ட உயர்தர வகுப்பு ஆசிரியர் கிருஷ்னானந்தனை? தெருவோரம் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த முரசொலி பத்திரிகையின் ஆசிரியரின் மகன் அகிலனை? இந்திய இராணுவம் செய்த கொடுமைகளைக் கண்டித்து மறியல் போராட்டம் செய்ததற்காக சுட்டுக் கொல்லப் பட்ட மருத்துவபீட மாணவன் சத்தியேந்திராவை, ஏதோ ஒரு உத்வேகத்தில் புலிகள் இயக்கத்துக்குப் போய் விட்டு பயிற்சியின் கடுமையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 3 மாதத்திலேயே திரும்பி வந்து சாதாரண வாழ்க்கை நடத்திவந்த இளைஞன் மோகனை இந்திய ராணுவத்துக்குக் கூடத் தெரியாமல் விசாரணைக்கு என்று அழைத்துச்சென்றீர்கள். இரண்டு நாள் கழித்து அவனை சத்தகக் காம்பாலேயே உடல்முழுதும் குத்திக் கொலை செய்து கொண்டு வந்து தெருவில் போட்டீர்களே ஞாபகம் இருக்கிறதா உங்களுக்கு? எங்கேயோ கேட்ட துப்பாக்கிச் சத்தத்துக்கு அருகில் இருந்த கல்லூரிக்குள் சென்று வகுப்பறைக்குள் நீங்கள் சரமாரியாகச் சுட்டதில் பலியான மாணவர்களை, படுகாயமடைந்த மாணவர்களை, ஆசிரியரை,ஞாபகம் இருக்கிறதா?

இவர்களை ஞாபகப் படுத்த எனக்கு எந்தக் குறிப்பேடும் தேவைப் படவில்லை.ஏனெனில் நான் பள்ளி செல்லும் போது வழியில் தெருவில் கண்டு சென்ற பிணங்கள் இவர்கள்.பெண்களையும் சிறுவர்களையும் மயானத்துக்கு செல்ல அனுமதிக்காத சமூகத்தில் உங்கள் தயவாலும் இந்திய ராணுவத்தின் தயவாலும் பிணங்களையும் டயர் போட்டு எரிக்கப் பட்ட எலும்புக் கூடுகளையும் நாங்கள் தெருவில் பார்த்தே வளர்ந்தோம். உங்களால் பலவந்தமாகத் தேசிய இராணுவத்துக்கு என்று பிடித்துச் செல்லப் பட்ட என் ஒன்று விட்ட சகோதரன் இன்றுவரை உயிருடன் உள்ளான இல்லையா என்று எமக்குத் தெரியாது.

சொல்லுங்கள் தோழர்களே இவர்களில் யார் நீங்கள் சொன்னபடி கிட்டு அல்லது அவருடன் சேர்ந்து உங்கள் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கொன்றார்கள்? துப்பாக்கிகளைக் கையில் வைத்திருந்த உங்கள் தலைவர்கள் யுகப் பிச்சை கேட்டும் புலிகள் கேட்கவில்லை என்று சொல்கிறீர்களே. நாங்கள் உங்களுக்கு எதிராகவோ இந்திய ராணுவத்துக்கு எதிராகவோ சிறு தடியைக் கூட எடுக்காமல் அல்லவே உங்களிடம் உயிர்ப் பிச்சை கேட்டோம்?. உங்கள் தலைவர்கள் பெயர் எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது. இவர்கள் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்குமா? கிடையாது. நாங்கள் பாவப் பட்ட பொதுஜனங்கள்.ஆனால் உங்களால் கொலைகாரன் என்று சொல்லப்பட்ட கிட்டுவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்டு மாமா என்றே அழைத்தோம்.அவருக்கு ஒரு கால் போனதற்கே மக்கள் எப்படித் துடி துடித்துப் போனார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். காரணம் அவர்கள் மக்களை நேசித்தார்கள்.

நானும் என் அண்ணனும் வீட்டில் தனியே இருந்தசமயம் உள்ளே நுழைந்த இந்திய ராணுவத்தினர் எங்களை தனித் தனி மூலைகளில் மடக்கியபோது, எனக்கு நடக்கவிருந்த கொடுமையின் முழு வடிவம் கூடத் தெரியாத வயதில் இராணுவத்தால் பக்கத்து அறைக்கு நான் நெட்டித் தள்ளப் பட்ட போது நீங்களும் அருகில் நின்றீர்கள்.விகாரச் சிரிப்புடன் வேடிக்கை பார்க்கத் தயாராக இருந்தீர்கள்.. என்னைப் பிடித்துத் தன்பின்னே நிறுத்தி தன் துப்பாக்கியை தன் சகாக்களை நோக்கி நீட்டி என்னைக் காக்க ஒரு தமிழகத்துத் தமிழனால் மட்டும்தான் முடிந்தது. சொல்லுங்கள் “தோழர்களே” உங்கள் கையில் இருந்த ஆயுதங்கள் யாரைக் காக்க யாருக்கு எதிராக ஏந்தப் பட்டவை?ராஜிவ் காந்திக்கு நன்றி. குறைந்த எண்ணிக்கையிலேனும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களையும் அமைதிப் படையில் அனுப்பி வைத்ததற்கு.அவர்கள் தான் தங்கள் சகாக்களிடமிருந்து மட்டுமல்ல உங்களிடமும் இருந்தும் தங்களால் முடிந்தவரையில் எங்களைக் காத்தார்கள்.

மேலே நான் சொன்னது அத்தனையும் யாழ் மண்ணில் மூன்று தெருக்கள் அடங்கிய ஒரு சிறிய பகுதியில் அந்தக் காலப் பகுதியில் தாங்கள் உயர் ஜாதியினர் என்ற அகந்தையும் பரம்பரைக் கல்விமான்கள் என்கின்ற ஆணவமும் கொண்ட சுயநல சமூகமான எங்கள் முதல் தலைமுறைகளும் எங்கள் கல்வி பாதிக்கக் கூடாது என்பதைக் கருத்தாகக் கொண்டு போனால் போகிறது என்று துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் அளவுக்கு மட்டும் சமூக அக்கறை கொண்ட எங்கள் தலைமுறைகளும் வாழ்ந்த இடத்தில் – யாருடைய போராட்டத்துடனும் அதிகம் பட்டுக் கொள்ளாத மக்களுக்கு நீங்கள் நடத்திய கொடுமைகளின் சிறிய அத்தியாயம். இவர்களையும் ஆவேசம் உள்ளவர்களாக மாற்றியது உங்கள் நடவடிக்கைகள்.இவர்களுக்கே இப்படி என்றால் உண்மையாகவே முழுமனதுடன் போராட்டத்தை ஆதரித்த மக்களுக்கும், தமிழ் ஈழமண்ணின் எல்லா மாவட்டங்களிலும் நீங்கள் செய்ததைப் பட்டியல் போட்டால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி ரத்தத்தில் தோய்ந்த இதிகாசங்கள் எழுதலாம்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, என்னும் குணங்களோ கூடப் பிறந்த சகோதரர் , பெற்றோரோ தங்கள் மானத்தைக் காக்க முடியாது என்று உணர்ந்த பெண்களும், தாங்கள் சொல்லும் மந்திரங்களும் கற்பூரம் காட்டும் கடவுள்களும் தங்களைக் காக மாட்டாது என்று பூணூலைக் கழட்டி எறிந்து விட்டு இளைஞர்களும் என எல்லா சமூகத்தவரும் இரவுகளில் வீட்டை விட்டு வெளியேறி கானகம் நோக்கிச் சென்றது உங்கள் அட்டகாசங்களால் தான். தங்கள் மகள் வெளியேறியபின்னர் இனி அவள் மானத்துடன் இருப்பாள் என்ற நிம்மதியில் நீங்கள் வந்து விசாரிக்கும் போது அவள் யாரோடோ ஓடிப் போய் விட்டாள் என்று தலை நிமிர்ந்து பெற்றோர் சொன்ன அதிசயம் நிகழ்த்திக் காட்டியவர்கள் நீங்கள்.

எங்கள் தேசியத்தலைவர் எத்தனை பெரிய தீர்க்கதரிசி என்பது அப்போதுதான் தெரிந்தது. அவர் இடத்தில் நின்று பார்க்க எனக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை என்றாலும் ஒரு கணம் நின்று பார்க்கிறேன்.நீங்கள் சொன்னபடி உங்களுடன் ஒற்றுமையாக நின்று போராடி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இது என்ன தமிழ் நாட்டு அரசியல் மேடையா கூட்டணிகளை மாறி மாறி அமைத்துக் கொள்ள? ஆயுதப் போராட்டம். படைபலத்தை மட்டுமே நம்பி இருப்பது. போராடத் துணிந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கையே கொஞ்சம். அதையும் எல்லோரும் பங்கு போட்டுக் கொள்வீர்கள். அதன் பிறகு போராட்டத்தின் ஆரம்பத்திலேயே காட்டிக் கொடுப்பவர், தலைமைக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைத்தவுடன் போராட்டத்தைக் கைவிடும் இயக்கம், எதோ கொஞ்ச அதிகாரம் வந்தால் போதும் என்று விலகும் இயக்கம், ஒன்றும் வேண்டாம் மது,மாது, பதவி சுகம் கிடைத்தால் போதும் என்று கைவிடும் இயக்கம் என்று பிரிந்து சென்றால், போராடச் சேர்ந்த இளைஞர்களும் தவறான பாதைக்கு போக நேர்ந்தால், ஒரே லட்சியத்துடன் போராடுபவன் என்ன செய்ய முடியும்? உங்களை அவர்கள் தங்கள் லட்சியப் பாதையிலிருந்து அகற்றிய படியால் தான் தமிழ் ஈழப் போராட்டம் மாபெரும் சக்தியாக எழுந்தது. இன்று உலக நாடுகள் அனைத்தும் , ஐ.நா. வரைக்கும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும் என்று சொல்லுகின்றது என்றால் அது விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களாலும் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளாலும் எங்கள் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலாலும் மட்டுமே தான்.அவர்கள் உங்களை அகற்றிய விதம் தப்பாக இருக்கலாம்.ஆனால் நீங்கள் லட்சியத்தின் தடைக் கற்கள், அகற்றப் பட வேண்டியவர்கள் என்பதை நீங்களே நிரூபித்து விட்டீர்களே? தலைவர் தான் ஆள வேண்டும் என்று இதைச் செய்யவில்லை.போராட்ட இலக்கு தமிழ் ஈழம் என்பதாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே இதைச் செய்துள்ளார். ஈரோஸ் இயக்கத்தை புலிகள் அப்படியே உள்வாங்கிக் கொண்டதும் குட்டிமணி தங்கத்துரை ஜெகன் ஆகியோர் மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதும் இதற்குச் சான்று.

உங்களுக்கு வேலை மினக்கெட்டு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் புலிகளுக்கு இல்லை.ஆனால், இப்போது நீங்கள் போடும் ஊடக ஊதல்கள் உங்கள் சுயரூபங்களை நீங்கள் காட்டிய காலப் பகுதிகளை அறியாத இளைஞர்களைக் குழப்பும். அதனால் தான் ஒரு சாதாரண பிரஜையாக உங்களால் மக்களுக்கு நடத்தப் பட்ட கொடுமைகளில் சின்னஞ்சிறு பகுதியை மட்டும் எடுத்துச் சொன்னேன்.

இதோ எங்கள் மாபெரும் தலைவன் இறந்தான் என்று கேலிச் சித்திரம் வரைகிறீர்கள். துள்ளிக் குதிக்கிறீர்கள்.களத்தில் சாதனைகள் புரிந்து தனி அரசையே நிறுவிக் காட்டியவன், தன் மக்களுக்கு உங்கள் எஜமானர்களால் வன்னியில் நடத்தப் பட்ட கொடுமைகளைப் பார்த்து மனமுடைந்து போய்விட்டான். தன் வீரர்களின் துப்பாக்கிகள் இனிமேலும் சத்தம் எழுப்ப மாட்டாது என்று கூறி விட்டான். அர்ப்பணிப்பும் வீரமும் நிறைந்து களமாடி சாதனை படைத்தவர்கள் ஆட்கடத்தலும் கப்பம் கோருதலும் வேறு சுகங்களும் என்று வாழ்ந்த உங்களைப் பார்த்துக் கேட்கிறார்கள்.தமிழர்களுக்காக போராடத் தயாரான எல்லா அமைப்புகளுடனும் சேர்ந்து அரசியல் ரீதியான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று. முடியுமா உங்களால்? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு காலத்தில் சிங்கள இராணுவத்துக்கு காட்டிக் கொடுத்தே நன்றாக வாழ்ந்த உங்களையும் தூக்கி எறிந்துவிட்டு கருணாவை மட்டும் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது சிங்கள அரசு. இனிமேலாவது குரல் கொடுப்பீர்களா? இதோ வன்னியில் இருந்து வந்து முகாம்களில் கிடக்கிறோம், வதை முகாம்களில் வதை படுகிறோம், கிளிநொச்சியில் வீடுகளுக்குள் உணவு உடை இரண்டுமே இன்றிக் கட்டிப் போடப் பட்டிருக்கிறோம், பொலனறுவையில் எங்கள் உடல் உறுப்புக்களை எடுப்பதற்காகக் கொல்லப் படுகிறோம். நீங்கள் முதன் முதலில் ஆயுதம் எடுத்ததன் நோக்கத்தில் சிறிதை என்றாலும் நிறைவேற்ற எமக்காகக் குரல் கொடுப்பீர்களா? எங்களை முகாம்களை விட்டு எங்கள் வீடுகளில் குடியேற அனுமதிக்குமாறு குரல் கொடுப்பீர்களா?குறைந்த பட்சம் புலிகளால் எங்களுக்கு கிடைக்கப் போகும் சிறு உரிமைகளை உங்கள் கூற்றுப்படி புலிகள் அழிந்துவிட்ட காரணத்தால் புலிகளின் எதிரிகள் எல்லோருமாகவாவது ஒற்றுமையாக நின்று பெற்றுத் தருவீர்களா? முடியுமா உங்களால்?

முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்

முடிந்தால் நன்றி. முடியாவிட்டால் விட்டுவிடுங்கள். ஏனெனில் நாங்கள் போரின் வலியையும் ரணங்களையும் சுமந்த உடலையும் மனதையும் மட்டுமல்ல, அந்த மனதுக்குள் விஸ்வரூபமெடுத்து நிற்கும் எங்கள் தலைவனையும் சுமந்து நிற்கிறோம். எங்கள் மனங்களுக்குள் மட்டுமல்ல, சற்று உண்மையுடன் உற்றுப் பாருங்கள். உளவுறுதியுடன் சாதித்துக்காட்டிய எங்கள் பெருந்தலைவனின் சிரித்தமுகம் உங்கள் மனங்களுக்குள்ளும் இருக்கும். பிரபாகரன் என்பது வெறும் ரத்தமும் சதையும் கொண்டு உயிர் சுமந்து வாழும் ஒரு உடம்பல்ல, ஒரு துப்பாக்கிக் குண்டில் அழிந்து போவதற்கு. அது எங்களின் மந்திரச்சொல். அவர் மரணமில்லாப் பெருந்தலைவர்.உங்கள் அத்தனை துரோகங்களையும் எரித்துச் சாம்பராக்கிவிடும் பெரு நெருப்பு. மீண்டும் எங்களை எழுந்து நிற்க வைக்கும் உத்வேகம். நீங்கள் கூறுவது போல அவர் இல்லையென்றாலும் கூட எங்களுக்குள்ளே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் எங்கள் தலைவன் எங்களை வழி நடத்துவான். அவருக்கு வந்துள்ளது அஞ்ஞாதவாசமோ அஸ்தமனமோ எதுவானாலும் அவர் பேசாமல் இருந்தே எங்களை வழிநடத்துவார்.எங்கள் உரிமைகளை நிச்சயம் நாங்கள் வென்றெடுப்போம்

மதியழகி

2/6/09

ஈழத் தமிழர்களின் நம்பிக்கையை இழந்து விட்டது இந்தியா: முன்னாள் இந்திய அமைச்சரவை செயலாளர் பி்.இராமன்

இலங்கை விவகாரத்தில் இந்தியா மேற்கொண்ட இரு விதமான நிலையால், உலகத் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு, தமிழர் விரோத அரசு என்பது போன்ற எண்ணம் ஆழப் பரவி விட்டது என்று முன்னாள் மத்திய அமைச்சரவை கூடுதல் செயலாளர் பி. இராமன் கூறியுள்ளார்
மத்திய அமைச்சரவையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி. இராமன். இப்போது சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட் பார் டாப்பிகல் ஸ்டடீஸ் மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார். இராமன் கூறுவதாவது...
இந்திரா காந்தியை இன்றும் நன்றியுடனும், உணர்வுடனும் நினைத்து்ப பார்க்கும் தமிழர்கள் அதிகம். குறிப்பாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இந்திரா காந்தி மீது மிகப் பெரிய மரியாதை உள்ளது. காரணம், நமக்காக அவர் துடித்தார், நமக்காக பரிவு காட்டினார், நம் மீது அன்பும், பாசமும் கொண்டிருந்தார், நாம் ரத்தம் சிந்தியபோது வேதனைப்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான். ஆனால் இன்று ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களும் மத்திய அரசின் மீது குறிப்பாக காங்கிரஸ் மீதும், சோனியா காந்தியின் மீதும் மிகப் பெரும் வருத்தத்தில், கோபத்தில் உள்ளனர். அதற்குக் காரணம்,
விடுதலைப் புலிகளுக்கு உதவியாக இந்தியா நடந்து கொள்ளவில்லை என்பதற்காக அல்ல, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் மிகக் கொடூரமான இனப்படுகொலைக்கு ஆளானபோதும் இந்தியா அதைக் கண்டும் காணாமல் விட்டு விட்டதே, கைவிட்டு விட்டதே என்ற வேதனையில்தான்.
ஈழத் தமிழர்களின் இந்தக் கோபம் இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல என்ற கருத்து பரவிக் கிடக்கிறது. உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் ஈழத் தமிழ் சமுதாயத்தினர் மத்தியில் ஆழ வேரூண்றி விட்ட இந்த எண்ணத்தை துடைக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்தியாவிடம் உள்ளது. இலங்கை விவகாரத்தில், இந்தியா இரட்டை வேடம் போட்டது என்பதில் ஈழத்தில் உள்ள தமிழர்களும் சரி, உலக நாடுகள் பலவற்றில் பரந்து விரிந்திருக்கும் தமிழ் சமுதாயத்தினர் மத்தியிலும் சரி யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டதை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக இவர்கள் வேதனைப்படுகின்றனர். தமிழர்களை அழித்த ராஜபக்சவுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியதற்காக கோபத்துடனும் உள்ளனர்.
இலங்கையில், கொடூரமான இனப்படுகொலை நடந்ததை இந்தியத் தரப்பிலிருந்து கடுமையாக யாரும் கண்டிக்காததவும், அதைத் தடுக்க முயலாததும் உலகத் தமிழ் சமுதாயத்தினரை மிகவும் வேதனைப்படுத்தி விட்டது. தமிழர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கெல்லாம் இந்தியாவின் முழு ஆதரவும் இருக்கிறது என்ற எண்ணத்தை ஆணித்தரமாக அவ்வப்போது கோத்தபாய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் நிரூபிக்க முயன்றபோது அதை தடுக்கவோ, மறுக்கவே இந்தியா முயலவில்லை என்பதும் இந்தியா மீதான உலகத் தமிழர்களின் வருத்தத்திற்கு இன்னொரு காரணம்.
இந்திய அரசும், காங்கிரஸும், இலங்கை இனப்பிரச்சினையில் நடந்து கொண்ட விதத்தால்தான் இன்று ஈழத் தமிழர்கள், சோனியா காந்தி மீது கோபமாக இருக்க முக்கியக் காரணம்.
இந்தக் கோபம்தான் இப்போது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் ரூபத்தில், கிட்டத்தட்ட விடுதலைப் புலிகளின் கருத்தாக, இணையதளங்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகள், செய்திகள், ஆய்வு செய்திகள் மூலம் உலா வந்து கொண்டுள்ளன. குறிப்பாக சோனியா காந்தியை தமிழர் விரோத சக்தியாக சித்தரித்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதேபோல, முதல்வர் கருணாநிதியையும் தமிழர் விரோத சக்தியாக மாற்றி வருகின்றனர். சோனியா காந்தியும், கருணாநிதியும் தமிழர்களை இக்கட்டான நிலையிலிருந்து மீட்காமல், அழிய விட்டு விட்டதாக கடும் கோபத்துடன் உள்ளது ஈழத் தமிழ் சமுதாயம். அதேபோல விடுதலைப் புலிகளும் கூட லெபனான் மீது இஸ்ரேல் 2006ம் ஆண்டு கடும் தாக்குதல் நடத்தியபோது உலக சமுதாயம் அழுத்தம் கொடுத்து இஸ்ரேலை அடக்கியது போல, இப்போதும் உலக சமுதாயம் இலங்கையை கட்டுப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் அது பொய்த்துப் போய் விட்டது.
பக்கத்தில் இருக்கும் இந்தியாவே அமைதியாக இருந்ததால் உலக சமுதாயமும், ஒப்புக்கு சில கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டு அமைதியாகி விட்டது. அதேசமயம், விடுதலைப் புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக வெளியான செய்திகளால் பிரபாகரன் மீதும், புலிகள் இயக்கம் மீதும் எதிர்மறையான கருத்துக்கள் பரவக் காரணமாகி விட்டது.
தென் ஆப்பிரிக்காவின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸைத் தவிர வேறு எந்த உலக அமைப்பும் விடுதலைப் புலிகளுக்கு பகிரங்க ஆதரவு தர முன்வரவில்லை. இந்தியா, இப்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான நாடாக மட்டுமல்லாமல், தமிழ் விரோத நாடாகவும் உலகத் தமிழர்களால் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இது இந்தியாவுக்கு நிச்சயம் நல்லதல்ல.
இந்திரா காந்தி மீது இன்னும் ஈழத் தமிழர்கள் நன்றியுடன் இருப்பதற்கு அவர் செயல்பட்டவிதமும், அவர் தமிழர்கள் பால் காட்டிய அன்பும், பரிவும், பச்சாதாபமும்தான் காரணம் என்பதை இந்திய அரசு மறந்து விட்டதாகவே தெரிகிறது. தமிழர்களின் துயரங்களுக்காகவும், அவர்கள் இழந்த உரிமைகளைப் பெறவும் இந்திரா காந்தி துடித்தார். ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அப்படியே இந்திராவுக்கு நேர் மாறாக இருப்பதாக ஈழத் தமிழர்கள் கருதுகிறார்கள். தமிழ் மக்களின் துயரத்தை கொஞ்சம் கூட பகிர்ந்து கொள்ளவோ, பரிவு காட்டவோ சோனியா முன்வரவில்லை என்பது அவர்களின் ஆழமான வருத்தமாக உள்ளது.
இந்த எண்ணத்தைத் துடைத்து, தமிழர்கள் மீது பாசத்துடன்தான் உள்ளோம் என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்கு, இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தி, தமிழர்களுக்கும் சம உரிமை, சம அந்தஸ்து, கெளரவமான, அமைதியான வாழ்க்கையைப் பெற்றுத் தர இந்தியா முழுமூச்சுடன் ஈடுபட வேண்டும்.
அது மட்டும்தான் இந்தியா மீதான அவப்பெயரை துடைக்க ஒரே வழி.

மரணத்தை வென்ற மாவீரன்


தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை. தமிழீழ மக்களுக்கு விடுதலை உணர் வூட்டி தியாக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் துணிவினை யும் தீரத்தையும் அவர்கள் பெற வழிகாட்டியவர் பிரபாகரன்.
சிங்கள அரசின் ஆசை வார்த்தை களுக்கோ அல்லது பதவி சபலங் களுக்கோ ஒரு சிறிதும் இரையாகாமல் இலட்சிய உறுதியோடு களத்தில் நிற்பவர் பிரபாகரன் மட்டுமே. எத்தனையோ போராளிக்குழுக்களின் தலைவர்கள் எல்லாம் விலைபோய்விட்ட பிறகுகூட தனது மக்களையும் மண்ணையும் காட்டிக்கொடுக்க அவர் ஒருபோதும் முன்வந்தது இல்லை. எனவேதான் அவரைத் தீர்த்துக்கட்டினால் விடுதலைப் போரையே முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் என சிங்கள அரசு பலமுறை திட்டமிட்டது. சிங்கள அரசு மட்டுமல்ல இந்திய "ரா" உளவுத்துறையும் அவரை ஒழித்துக்கட்ட பலமுயற்சிகளை செய்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. சிங்கள ஊட கங்களும் பத்திரிகைகளும் மட்டுமல்ல, இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு அத்தகைய செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன. ஒவ்வொரு முறையும் அவர் முன்னிலும் வலிமையோடு எழுந்து நின்றார்.
1984
ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அதிர்ச்சியான செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியானது. சிங்கள இராணுவம் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக அச்செய்திகள் கூறின. இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. அன்றிரவு நானும் எனது குடும்பத்தினரும் உறங்க முடியவில்லை. அளவற்ற கவலையில் ஆழ்ந்திருந்தோம். மறுநாள் காலை ஒரு இன்ப அதிர்ச்சி எங்களை எதிர்கொண்டது. மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு முன்னாள் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சிரித்த முகத்துடன் பிரபாகரன் இறங்கி வந்தார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியால் திகைத்தனர். புன்னகையுடன் உள்ளே வந்த பிரபாகரன் சிறுமியான எனது மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு "மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல" என்றார். அடுத்த நிமிடம் எல்லோரும் கலகலவென நகைத்தோம்.
1989
25-7-89 அன்று மற்றொரு திடுக்கிடும் செய்தி வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்ப தாகவும் தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.வடக்கு கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், பிரபாகரன் இறந்த செய்தியை உறுதிசெய்தார்.ஆனால் 2 நாட்களில் இச்செய்தி யில் கொஞ்சம் கூட உண்மையில்லை - பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக் கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
2004
26-12-2004அன்று வீசிய சுனாமி யின்போது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மானும் பேரலை களால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றும் ஒரு பரபரப்பான செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது. பிரபா கரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று தமிழ்ப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இந்து இதழ் கூறியது. அதுமட்டுமல்ல இலங்கைக் கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார்.
முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்ந்த இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளி யிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக் கவே இல்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளி நொச்சியில் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்து வெளியிட்டது. பிரபா கரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்து இதழுக்கு இல்லை.
15-12-2007 அன்று சிங்கள விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்திருப்ப தாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை வெளியிட்டது.
இந்தியச் சதிசிங்கள அரசு மட்டுமல்ல இந்திய அரசும் பிரபாகரனை படுகொலை செய்ய சதி செய்தது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் தான் எழுதிய "இலங்கையில் தலையீடு" என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:
இலங்கையில் இந்திய தூது வரான ஜே.என். தீட்சித் இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத் தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழர்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதி யாக நம்பினார்கள். இதையெல்லாம் நான் தீட்சித்திடம் நான் சொன்னபோது அவர் பின்வருமாறு கூறினார்.
"ஜெனரல் நான் உங்களுக்கு போடும் கட்டளைககள் எல்லாம் பிரத மரிடம் கலந்துகொண்டுதான் சொல் கிறேன். அதை நீங்கள் மனதில் வைத் துக்கொள்வது நல்லது" என்று கூறினார்.1987ல் செப்டம்பர் 14, 15 தேதி களில் எனக்கு தீட்சித்திடம் இருந்து போன் வந்தது. "இந்திய அமைதிப் படையுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுங்கள். இல்லையென்றால் அவரை நீங்கள் கைதுசெய்தாவது இந்திய அரசிடம் ஒப்படையுங்கள், என்றார் தீட்சித். அதிர்ச்சியடைந்த நான். எனது மேலதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு எனது பதிலை தெரிவிக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். தீபேந்தர் சிங்கிடம் பேசியபோது அவரும் ஆவேசம் அடைந்து "தீட்சித்திடம் சொல்லுங்கள் நம்முடைய இராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதன்படி வெள்ளைக்கொடியின் கீழ் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்தவகையிலும் அழகல்ல" என்றார்.
இதை நான் சொன்னதும் "நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னு டையது அல்ல ராஜீவின் உத்தரவின்படி தான். நீங்கள் தான் இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடுகிற அதிகாரி. உங்களுக்குத்தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது" என்றார் தீட்சித் கோபமாக.மறுநாள் காலையில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இருந்த இரா ணுவ ஆபரேசன்களுக்கான இயக்குநர் ஜெனரல் பி.சி. ஜோசியை தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டிற்கே ஆதரவு தெரிவித்தார். இராணுவத் தலைமைத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக பல்வேறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதில் சிங்கள அரசும் இந்திய "ரா" உளவுத்துறையும் ஈடுபட்டு வந்திருக்கின்றன.
ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்துவிட்டன. பிரபாகரனை கொலை செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பினார். மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்.
நன்றி
தென்செய்தி