2/6/09

மரணத்தை வென்ற மாவீரன்


தமிழீழ விடுதலைப் போராட் டத்தின் அச்சாணியாக திகழ்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் என்பது உலகறிந்த உண்மை. தமிழீழ மக்களுக்கு விடுதலை உணர் வூட்டி தியாக வேள்வியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் துணிவினை யும் தீரத்தையும் அவர்கள் பெற வழிகாட்டியவர் பிரபாகரன்.
சிங்கள அரசின் ஆசை வார்த்தை களுக்கோ அல்லது பதவி சபலங் களுக்கோ ஒரு சிறிதும் இரையாகாமல் இலட்சிய உறுதியோடு களத்தில் நிற்பவர் பிரபாகரன் மட்டுமே. எத்தனையோ போராளிக்குழுக்களின் தலைவர்கள் எல்லாம் விலைபோய்விட்ட பிறகுகூட தனது மக்களையும் மண்ணையும் காட்டிக்கொடுக்க அவர் ஒருபோதும் முன்வந்தது இல்லை. எனவேதான் அவரைத் தீர்த்துக்கட்டினால் விடுதலைப் போரையே முடிவுக்குக் கொண்டுவந்து விடலாம் என சிங்கள அரசு பலமுறை திட்டமிட்டது. சிங்கள அரசு மட்டுமல்ல இந்திய "ரா" உளவுத்துறையும் அவரை ஒழித்துக்கட்ட பலமுயற்சிகளை செய்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக பலமுறை செய்திகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. சிங்கள ஊட கங்களும் பத்திரிகைகளும் மட்டுமல்ல, இந்திய ஊடகங்களும் பத்திரிகைகளும் போட்டிப்போட்டுக்கொண்டு அத்தகைய செய்திகளை வெளியிட்டு மகிழ்ந்தன. ஒவ்வொரு முறையும் அவர் முன்னிலும் வலிமையோடு எழுந்து நின்றார்.
1984
ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அதிர்ச்சியான செய்தி ஒன்று பத்திரிகைகளில் வெளியானது. சிங்கள இராணுவம் பிரபாகரனை சுட்டுக்கொன்றுவிட்டதாக அச்செய்திகள் கூறின. இலங்கையில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் உலகெங்கிலும் பெரும் பரபரப்பும் பதைப்பும் ஏற்பட்டன. அன்றிரவு நானும் எனது குடும்பத்தினரும் உறங்க முடியவில்லை. அளவற்ற கவலையில் ஆழ்ந்திருந்தோம். மறுநாள் காலை ஒரு இன்ப அதிர்ச்சி எங்களை எதிர்கொண்டது. மதுரையில் உள்ள எனது வீட்டிற்கு முன்னாள் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து சிரித்த முகத்துடன் பிரபாகரன் இறங்கி வந்தார். குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியால் திகைத்தனர். புன்னகையுடன் உள்ளே வந்த பிரபாகரன் சிறுமியான எனது மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு "மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல" என்றார். அடுத்த நிமிடம் எல்லோரும் கலகலவென நகைத்தோம்.
1989
25-7-89 அன்று மற்றொரு திடுக்கிடும் செய்தி வெளியிடப்பட்டது. புலிகள் இயக்கத் துணைத் தலைவர் மாத்தையாவிற்கும் பிரபாகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்திக்கொண்டிருப்ப தாகவும் தமிழக பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.வடக்கு கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வரதராசப் பெருமாள், பிரபாகரன் இறந்த செய்தியை உறுதிசெய்தார்.ஆனால் 2 நாட்களில் இச்செய்தி யில் கொஞ்சம் கூட உண்மையில்லை - பிரபாகரன் உயிரோடு நலமோடு இருக் கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.
2004
26-12-2004அன்று வீசிய சுனாமி யின்போது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டுஅம்மானும் பேரலை களால் அடித்துச்செல்லப்பட்டதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை யென்றும் ஒரு பரபரப்பான செய்தியை இந்து நாளிதழ் வெளியிட்டது. பிரபா கரனுக்காக விலைஉயர்ந்த சவப்பெட்டி ஒன்று தமிழ்ப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இந்து இதழ் கூறியது. அதுமட்டுமல்ல இலங்கைக் கடற்படையின் வைஸ் அட்மிரல் தயாசந்தகிரி, பிரபாகரனும் பொட்டு அம்மானும் சுனாமி அலைகளில் கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தார்.
முதல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட்டு மகிழ்ந்த இந்து நாளிதழ் விடுதலைப் புலிகளின் சார்பில் வெளி யிடப்பட்ட மறுப்பு செய்தியை பிரசுரிக் கவே இல்லை. ஆனால் 10 நாட்கள் கழித்து நார்வே நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளி நொச்சியில் பிரபாகரனைச் சந்திக்கும் படத்தை இந்து வெளியிட்டது. பிரபா கரன் இறந்துவிட்டதாக கூறியதற்கு வருத்தம்கூட தெரிவிக்கும் நாணயம் இந்து இதழுக்கு இல்லை.
15-12-2007 அன்று சிங்கள விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்திருப்ப தாகவும் அவர் இரகசியமான ஒரு இடத்தில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பிழைப்பது இயலாத ஒன்று என்றும் பரபரப்பான செய்தியை இலங்கை பாதுகாப்புத்துறை வெளியிட்டது.
இந்தியச் சதிசிங்கள அரசு மட்டுமல்ல இந்திய அரசும் பிரபாகரனை படுகொலை செய்ய சதி செய்தது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் தான் எழுதிய "இலங்கையில் தலையீடு" என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:
இலங்கையில் இந்திய தூது வரான ஜே.என். தீட்சித் இந்திய அமைதிப்படை மூலம் புலிகளைப் பற்றிய அவதூறுகளை அங்குள்ள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பச் சொன்னார். அதை நாங்கள் ஏற்க மறுத் தோம். நாங்கள் சொல்வதை நம்ப அங்கு யாரும் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். அங்குள்ள தமிழர்கள் தனி ஈழத்தை விடுதலைப்புலிகள் மூலமாக மட்டுமே அடைய முடியும் என்று உறுதி யாக நம்பினார்கள். இதையெல்லாம் நான் தீட்சித்திடம் நான் சொன்னபோது அவர் பின்வருமாறு கூறினார்.
"ஜெனரல் நான் உங்களுக்கு போடும் கட்டளைககள் எல்லாம் பிரத மரிடம் கலந்துகொண்டுதான் சொல் கிறேன். அதை நீங்கள் மனதில் வைத் துக்கொள்வது நல்லது" என்று கூறினார்.1987ல் செப்டம்பர் 14, 15 தேதி களில் எனக்கு தீட்சித்திடம் இருந்து போன் வந்தது. "இந்திய அமைதிப் படையுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரபாகரன் வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிடுங்கள். இல்லையென்றால் அவரை நீங்கள் கைதுசெய்தாவது இந்திய அரசிடம் ஒப்படையுங்கள், என்றார் தீட்சித். அதிர்ச்சியடைந்த நான். எனது மேலதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் பேசிவிட்டு எனது பதிலை தெரிவிக்கிறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டேன். தீபேந்தர் சிங்கிடம் பேசியபோது அவரும் ஆவேசம் அடைந்து "தீட்சித்திடம் சொல்லுங்கள் நம்முடைய இராணுவம் ஒருபோதும் முதுகில் சுடுகிற கோழையல்ல. அதிலும் சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதன்படி வெள்ளைக்கொடியின் கீழ் ஒருவரை சுட்டுக்கொல்வது நமக்கு எந்தவகையிலும் அழகல்ல" என்றார்.
இதை நான் சொன்னதும் "நான் உங்களுக்கு இடுகிற கட்டளை என்னு டையது அல்ல ராஜீவின் உத்தரவின்படி தான். நீங்கள் தான் இந்திய அமைதிப்படைக்கு உத்தரவிடுகிற அதிகாரி. உங்களுக்குத்தான் இதை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது" என்றார் தீட்சித் கோபமாக.மறுநாள் காலையில் டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இருந்த இரா ணுவ ஆபரேசன்களுக்கான இயக்குநர் ஜெனரல் பி.சி. ஜோசியை தொடர்பு கொண்டேன். அவர் என்னுடைய நிலைப்பாட்டிற்கே ஆதரவு தெரிவித்தார். இராணுவத் தலைமைத் தளபதி சுந்தர்ஜியும் தீட்சித் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.இப்படியெல்லாம் பிரபாகரன் இறந்துவிட்டதாக பல்வேறு செய்திகளை தொடர்ந்து பரப்புவதில் சிங்கள அரசும் இந்திய "ரா" உளவுத்துறையும் ஈடுபட்டு வந்திருக்கின்றன.
ஆனால் இச்செய்திகள் சிறிது காலத்திலேயே பொய்த்துவிட்டன. பிரபாகரனை கொலை செய்ய திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனாலும் எல்லாவற்றிலிருந்தும் அவர் தப்பினார். மரணத்தை வென்ற மாவீரனாக இன்னமும் திகழ்கிறார்.
நன்றி
தென்செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக