வவுனியா முகாம்களிலுள்ள சிறுவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றனர்.
வவுனியா முகாமில் திட்டமிட்ட அடிப்படையில் பெற்றோரையும், பிள்ளைகளையும் தனித்தனியாகத் தடுத்து வைத்துள்ள சிறீலங்கா படையினர், தமிழ் சிறுவர்களை புனர்வாழ்வு என்ற பெயரில் சிங்களப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லுகின்றனர்.
18 அகவைக்கு உட்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தும் படையினர், அவர்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என ஒப்புக்கொள்ள வேண்டும் என பணித்துவிட்டு, படையில் இணைக்கப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதாக பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே பல சிறுவர்கள் இவ்வாறு சிங்களப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், மேலும் 400 சிறுவர்கள் இவ்வாறு கொண்டு செல்லப்பட இருப்பதாக, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜகத் வெள்ளவத்த உறுதிப்படுத்தியுள்ளார்.
தமிழினத்தின் எதிர்காலத்தை திட்டமிட்டு அழிக்கும் சிறீலங்கா அரசின் நடவடிக்கைக்கு எதிராக, பன்னாட்டு மனிதநேய அமைப்புக்களும், மனித உரிமை நிறுவனங்களும் விரைந்து குரல் கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக