29/5/09

ஈழ மண்ணில் இந்தியாவின் பொறுக்கித்தனம்

ஆக்கமும் அழிவும் ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றுகிறது என்பதே அறிவியல் அடிப்படை. ஆக்கசக்திக்கு பயன்படுத்தக்கூடிய அனைத்துப் பொருள்களையும் அழிவுசக்திக்கு பயன்படுத்தமுடியும் என்பதே மாந்தவெறி அறிவியல் கண்டுபிடிப்பு.

இப்போதைய உச்ச அறிவியல் கண்டுபிடிப்பான செய்மதிகள் (சேட்டிலைட்) அண்டவெளியில் ஏற்படும் மாற்றங்களை உலக உயிர்களுக்கு தெரிவித்து மாந்தகுல வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டி செய்து அனுப்பப்பட்டது. ஆனால் மனித உயிர்களை காசுகளாக மாற்றும் முதலாளிய வெறியர்களின் உல்லாச வாழ்க்கைக்காக உழைக்கும் மக்களின் உயிரசைவுகள் கூட கண்காணிக்கப்பட்டு காட்டிக்கொடுக்கப்படும் அவலநிலை.

இந்நிலை இன்னும் தொடரும்., உலக மக்களுக்கு இனி அந்தரங்கம் என்னு எதுவும் இருக்கமுடியாது. அனைத்தும் வல்லரசியக் கண்களுக்கு முன்னே வெட்ட வெளிச்சமாய் காட்சிப் பொருளாய் மனித இனம் கூனிக்குறுகி அழிந்து போகும்.

இக்காட்சிகள் ஒரு தொடக்கமே


நம் இனத்தை எவ்வளவு துல்லியமாக சிங்கனவனுக்கு காட்டிக்
கொடுத்திருக்கிறது
இந்தக் கொலைவெறி திமுக - காங்கிரசு அரசுகள்

தமிழீழப் பகுதியின் வரைபடமே இல்லாமல் இருந்தபோதே சிங்களவனின் வெறி பல தமிழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அப்பட்டமாக துல்லியமாக காட்டிக் கொடுத்தால் ஒட்டு மொத்த தமிழினத்தையும் அழித்துவிடுவான் என்று எண்ணியே இந்த (கூட்டி) காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்தது இந்திய பார்ப்பனீய வெறி அரசு.

நமது தலைவரின் ஒவ்வொரு தாக்குதல் திட்டங்களும் நகர்வுகளும் இப்படியே காட்டிக் கொடுக்கப்பட்டு இன்று நம்மை ஏன் என்று கேட்க நாதியற்ற இனமாக ஆக்கிவிட்டான்.

ஆனால் இந்திய சிங்கள வெறி அரசுகள் இதற்கான பலனை அனுபவித்தே தீரும்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

மேலும் காண
http://www.vidivu.lk/tm.asp?fname=20090502_Video

3 கருத்துகள்:

  1. "மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி " என்பார்கள். அதுபோல தான் தமிழினத்திற்கு தலைமை தாங்கும் தலைவர்களின் நிலை அதனால் மக்களும் அவர்களை தான் பின்பற்றி வருகிறார்கள்.இந்திய அரசும் பார்ப்பனிய பாதந்தாங்கிகளும் தமிழனின் காலுக்கடியில் வைத்திருக்கும் நெருப்பை உணராமல் தூங்கிக் கொண்டிருக்கிறான்.எரிந்து போன பின் என்ன செய்யலாம் என்று கூட சிந்திக்கிறானோ?

    தேன்மொழி அவையன்

    பதிலளிநீக்கு
  2. தலைவர் (பிரபாகரன்) வருவார்
    இதற்கு எல்லாம் பதில் சொல்லுவார்..

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

    பதிலளிநீக்கு