4/8/09

அறிவியல் பொதுமை அறிஞர் எங்கெல்சுக்கு வீரவணக்கம்

1820-ல் நவம்பர் 28-ல் ஜெர்மனியில் உள்ள பார்மன் என்ற ஊரில் ஒரு நெசவாலை முதலாளியின் மகனாகப் பிறந்தார்.

எங்கெல்ஸ் சிறுவனாயிருந்தபோதே கலை, இலக்கியம், பல மொழிகளைக் கற்றல், பாட்டுகள் எழுதுதல், குதிரைச் சவாரி, கத்திச் சண்டை போன்றவைகளிலும் திறமை மிக்கவராய் இருந்தார்.

ஜெர்மனியின் மான்செஸ்டர் என்றழைக்கப்பட்ட ”உப்பெர்தல்” எனும் ஊர் அங்கு மிக வேகமாக வளர்ந்த ஆலைத் தொழிலால் தொழிலாளர்கள் படுபயங்கரமாக சுரண்டப்பட்டனர். .இது குறித்து அவர் தனது முதல் இதழான ஜெர்மன் தந்தியில் கட்டுரையாக ”உப்பெர்தல் கடிதங்கள்” எனும் தலைப்பில் எழுதினார்.

1837-ல் அவரது தந்தை தனது நெசவாலை அலுவலகத்திலேயே வேலை கற்றுக் கொள்ள அமர்த்தினார். ஆனால் எங்கெல்சுக்கோ வியாபாரத்திலோ அலுவலகப் பணிகளிலோ ஈடுபாடு ஏற்படவில்லை. பல நாடுகளுடைய பல மொழிகளில் வந்து கொண்டிருந்த அந்தக் காலங்களில் தடை செய்யப்பட்ட புத்தகங்களும் இதழ்களும் அவருக்கு கிடைத்தன. அவைகளின் வழி உலகக் கண்ணோட்டத்தைப் பெற்றார்.

1830-ல் நடந்த பிரெஞ்சுப் புரட்சியும் ஜெர்மனியில் சமுதாய அரசியல் முரண்பாடுகள் கூர்மையடைந்ததும் அப்போதைய தத்துவாசிரியர் கெகலின் கருத்துக்களும் எங்கெல்சை இம்மாந்த சமூகத்தின் மீது கூடுதல் அக்கறை ஏற்படுத்தியது. அந்நாட்களில் கெகலின் கருத்துக்களை பார்த்து அதிலிருந்து செழுமைப்பட்டு விடுதலைக்கும் உரிமைக்குமான போராட்ட கருத்துக்களை முன்வைத்து பியார்னோ என இருவருடைய சிந்தனைகளையும் எங்கெல்ஸ் அறிவார்த்தமாக அணுகினார்.

விஞ்ஞானத்திற்கும், வாழ்க்கைக்கும் தத்துவ ஞானத்திற்கும், அரசியலுக்கும், சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் ஒன்றின் மீது ஒன்று செல்வாக்குச் செலுத்தவேண்டும் என அறிந்தார்.

மேலும் தனது ஜெர்மன்தந்தி இதழின் வழி பல கட்டுரைகள் முதலாளி வர்க்கம் மக்களை எவ்வழிகளிலெல்லாம் சுரண்டுகிறது என்பதை விளக்கினார். முடியரசு மற்றும் நிலபிரபுத்துவம் குறித்தும் அதன் கொடூரம் அப்பாவி உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் உழைப்பை உறிஞ்சிக் கொழுப்பதை அப்பட்டமாக தோலுரித்து எழுதினார். அன்றைய காலகட்டத்திலேயே ”எந்த விதமான வகுப்புமில்லாத, முழுமையான எல்லோருக்கும் சம உரிமை உள்ள குடிமக்களின் தேசம்” என முழக்கத்தை பிரகடப்படுத்தினார். 1841-ல் அந்த நாட்டு அரசியல் விதிப்படி எங்கெல்ஸ் இராணுவச் சேவைக்குச் சென்றார். பெர்லின் பீரங்கிப் படையில் சேர்ந்தார். அவருடைய அறிவியல் நுணுக்கம் அவரை பீரங்கிப் படையின் சிற்றதிகாரியாக மாற்றியது. இது அவருக்கு இராணுவ விஞ்ஞான அறிவைப் பெற உதவியது.
1842-ல் மார்க்சு ரைன் இதழில் ஆசிரியராக இருந்தார். அப்போது அவ்விதழில் எங்கெல்சின் பல கட்டுரைகள் வெளிவந்தன. இருப்பினும் இருவரும் சந்தித்துக் கொண்டதில்லை. 1942-ல் இராணுவச் சேவையை முடித்துக் கொண்டு பிரிட்டனில் தங்கினார்.

பிரிட்டனில் நிலவிய வர்க்க முரண்பாடுகளின் கூடிய தன்மை எங்கெல்சை கடும் வியப்புக்குள்ளாக்கியது. இதனால் பிரிட்டனில் அவர் எழுதிய முதல் கட்டுரையே உடமையற்றவர்கள் எனும் ஒரு வர்க்கத்தை இங்கிலாந்தின் இயந்திர தொழில் வளர்ச்சி உருவாக்கியிருக்கிறது என எழுதினார். ”பாட்டாளி வர்க்கத்திற்குள் சகல விதமான சுரண்டல்களையும் ஒழித்துக் கட்டுவதற்காகவே படைக்கப்பட்டுள்ள ஒரு சமுதாய சக்தி அடங்கிக் கிடப்பதை தெளிவாகக் கண்டுகொண்டார். பிரிட்டிஸ் சோசலிச புரட்சியாளர்களின் ஒழுக்கம் நிறைந்த புத்துலகம் (The New Moral World) என்ற இதழில் பணியாற்றினார்.
1844-ல் ஜெர்மன் – பிரெஞ்ச் ஆண்டு மலர் என்ற இதழில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய விமர்சனக் குறிப்புகள் எனும் படைப்பை வெளியிட்டார். இதில் பிரிட்டனை ஆள்வது யார்? என்ற கேள்விக்கு பிரிட்டனை ஆள்வது சொத்துதான் என விடையளித்தார். முதாளித்துவ வர்க்கத்திற்கும் தனியார் சொத்துரிமைக்கும் எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்துகிற போராட்டத்தில் கிடைக்கின்ற வெற்றியில் பிறக்க வேண்டிய உண்மையான சனநாயத்தை முன்வைத்தார்.
இருவரும் ஒரு புதிய பொருள்முதல்வாத இயக்கவியலில் அடித்தளத்தை அமைத்து, பொருள்முதல்வாதத்தையும் இயக்கவியலையும் ஒன்றாக இணைத்து முழுமையான ஒரு உலகக் கண்ணோட்டத்தை உருவாக்கினர்.

1843-ல் லண்டனில் இருந்த பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த சனநாயகவாதிகள் பங்கு கொண்ட கூட்டமொன்றில், சர்வதேச சனநாயகவாதிகளின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் தான் ”பாட்டாளி வர்க்க சர்வதேசியம்” என்ற முழக்கத்தை முதன் முதலில் முன்வைத்தார்.
”முதாளித்துவச் சமூகத்தை அழித்தொழிப்பதற்கு ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஒவ்வொரு வர்க்கத்தையும் போலவே, பாட்டாளி வர்க்கமும் முதற்கண் அரசியல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற பாட்டாளி வர்க்க சர்வதேசத்தின் மூலக்கருவை மார்க்சும் எங்கெல்சும் முன்வைத்தனர். இதற்காக பாட்டாளி வர்க்க கட்சி ஒன்றை உருவாக்கினர். இதன் முதற்கூட்டமாக செய்தியாளர்களின் வழி கமிட்டி ஒன்றை உருவாக்கினர். இதன் வழி பல்வேறு நாடுகளிலிருந்த சோசலிச இயக்த்தின் பிரநிதிகளுடன் கடிதப் போக்குவரத்துகளின் வழி தங்களது பாட்டாளி வர்க்க சர்வதேசிய கருத்தைப் பரப்பினர்.
எங்கெல்சு கம்யூனிஸ்ட்களின் வரையறையாக வைத்தது
1.முதலாளிகளின் நலனுக்கெதிராக பாட்டாளிகளின் நலன்களை முன்வைப்பது.

2.தனியார் சொத்துரிமையை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக சொத்துக்களை பொதுவுடைமை ஆக்குவதன் மூலமாக அதை அடைவது.

3.பலாத்கரமான சனநாயகப் புரட்சியைத் தவிர வேரெந்த வழியையும் இதற்காக ஒத்துக் கொள்ள மறுப்பது.
இப்படியாக கம்யூனிச கோட்பாடுகள் என்று கம்யூனிச அறிக்கையின் முதன் நகல் உருவாக்கப்பட்டது.

இப்படியாக உழைக்கும் மக்களின் முழுமையான விடுதலைக்காய் தனது வாழ்க்கை முழுவதையுமே போராட்டக்களமாய் மாற்றிக் கொண்டு வாழ்ந்ததோடு உலகிற்கு மார்க்சியம் எனும் வாழ்வியல் தடத்தை உருவாக்கிய மாபெரும் மேதை மார்க்சின் உற்ற தோழனாய் ”பொதுவுடைமை” எனும் மாபெரும் அறிவுக் களஞசியத்தை உலகிற்கு அளித்து உழைக்கும் மக்களின் உற்ற தோழனாய் வாழ்ந்த அறிவியல் மேதை எங்கெல்சு 1895-ல் ஆகத்து 5-ம் நாள் தனது சிந்தனையை நிறுத்திக் கொண்ட
இப்புரட்சியாளருக்கு உழைக்கும் மக்களின் வீரவணக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக