20/3/13

மாணவர்கள் 16 பேர் கலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் , இன்று 3வது நாள் ஈரோடை, கருங்கல்பாளையம், பட்டாளிகள் படிப்பகம்
ஈரோடை, கருங்கல்பாளையம், பட்டாளிகள் படிப்பகம்

ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நமது மாணவ மாணவியர் செய்துகொண்டிருக்கிறீர்கள். பொறுமையோடு, பொறுப்புணர்வோடு, அற்புதமாகப் பணியாற்றுகிறீர்கள். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசிவருகிறேன். அழகான தமிழில், அருமையானக் கருத்துக்களை, ஆணித்தரமாக எடுத்து வைக்கும் விதம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, அபாரமான துணிவு – உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துளிர் விடுகிறது மனதில்.

இங்கே தமிழர்கள் என்ற இன உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். சாதாரணத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணும், மலையும், நீரும், கடலும், காடும், காற்றும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், திறமையின்மை முற்றிலும் அகற்றப்பட்டாக வேண்டும். பொதுவாழ்வுக்கு வருவோர் உண்மையும் தூய்மையும் ஒழுக்கமும் உடையோராய் இருக்க வேண்டும்; இல்லையேல் வேரோடு, வேரடி மண்ணோடுக் களையப்பட வேண்டும்.

கல்லூரிகளை, விடுதிகளை மூடிவிடுவதால் புரட்சிகள் அழிந்து விடுவதில்லை.

நமது இனம் விடுதலை அடைந்தாக வேண்டும். இனவிடுதலை என்பது இன்னொருவரிடம் யாசித்துப் பெறுவதல்ல; நாமே எடுத்துக் கொள்வது. புது வாழ்வு என்பது இன்னொருவர் நமக்குப் பிச்சைப் போடுவதல்ல; நாமே அமைத்துக் கொள்வது. வாருங்கள் தோழர்களே, வழி நடத்துங்கள்!


தொடர்புக்கு  - 8760444600,7373651155,9965555694

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக